மேலைநாட்டார் வருகையின் பின்னரான உரைநடை / நவீன உரைநடை
மேலைநாட்டார் தமிழ்நாட்டுக்குள் வருவதற்கு முன்னர் உரைநடை ஓரளவு வளர்ச்சியடைந்திருப்பினும் நவீன உரைநடை என்கின்ற அம்சம் தோற்றம் பெறவில்லை. அத்துடன் உரையாசிரியர்களின் உரைநடை மரபு ஆக்க இலக்கிய முறைமைக்கு பயன்படுத்தப்படவில்லை. 18ம் நூற்றாண்டின் பின்னர் பல்வேறு காரணங்களினால் நவீன உரைநடை தமிழில் வளர்ச்சியடையத் தொடக்கிற்று.
- தமிழ் மூலமான அச்சியந்திரசாலைகள் நிறுவப்பட்டமை.
- கிறிஸ்தவ மதம்பரப்புதலும் அதற்கெதிரான நடவடிக்கைகளும்
- பத்திரிகைகளின் தோற்றமும், வளர்ச்சியும்.
- ஆங்கில இலக்கிய வடிவங்களான நாவல்,சிறுகதை, கட்டுரை, ஆராய்சிகள் முதலியன அறிமுகப்படுத்தப்பட்டமையும்,மொழிபெயர்,
- பேச்சு மொழிசார்ந்த உரைநடையைக் கையாண்டமை.
- துண்டுபிரசுர,அகராதி முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டமை.
போன்றவை காரணமாக நவீன உரைநடை எல்லாவற்றையும் உள்வாங்குகின்ற ஓர் இயல்போடு வளர்ச்சியடைந்ததெனலாம். உண்மையில் நவீன உரைநடையின் வளர்ச்சிதான். நவீன இலக்கியங்கள் தோன்றுவதற்கு வித்திட்டதாகும்.
நவீன உரைநடையின் ஊடக அகராதி,ஒப்பிலக்கணம், அறிவியல் வரலாறு போன்ற பல்வேறு துறைகள் வளர்வதற்கும் உரைநடை என்கின்ற சாதனம் முக்கியமானதாக பயன்படுத்தப்படுகின்றது.
மேலைநாட்டார் வருகைக்கு முன் மூன்று விதமான உரைநடைகள் தமிழில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
- உரையாசிரியர் கையாண்ட கற்றறிந்த புலவர்களுக்கேற்ற பண்டிதர் நடை அல்லது தூயதமிழ் நடை.
- கல்வெட்டுகளில் பயன்படுத்தப்பட்ட பேச்சுவழக்கு நடை.
- வட மொழியும், தமிழும் கலந்த மணிப்பிரவாள நடை.
ஆனால் மேலைநாட்டார் வருகைக்குப் பின்னர் தமிழ் உரைநடை மெல்லமெல்ல நவீன இயல்புகளை பெறத்தொடங்கியது. இத்தகைய நடையை ஆரம்பத்தில் விவிலியத்தமிழ் குறிப்பிடுகின்றனர்(bible tamil). வீரமாமுனிவர் என்கின்ற இத்தாலியப்பாதிரியாரின் உரைநடை முயற்சியே தமிழில் நவீன உரைநடை தோன்றுவதற்கு வித்திட்டது. நவீன உரைநடை தோன்றுவதற்கு கிறிஸ்தவபாதிரிமார்களும் தமிழ் புலமை சார்ந்த அறிஞர்களும் 19ம் நூற்றாண்டில் முக்கிய பணிகளை ஆற்றியிருக்கின்றனர். மேலை நட்டார் வருசையில்,
- தத்துவ போதகசுவாமிகள் (இராபாட் டி நொபிலி,1577-1656)
- வீரமாமுனிவர் (C.J.Beschi , 1680-1742)
- சீகன் பால்கு ஐயர் (1683-1716)
- கிரேனியிஸ் (1790-1838)
- கால்டுவெல் (1814-1891)
- போப் ஐயர் (G.U.pope 1820-1907)
குறிப்பிடத்தக்கவர்கள்.ஆறுமுகநாவலர் காலத்தோடு தமிழ் உரைநடை இன்னொரு படிநிலையை பெறுகின்றது. இவரது காலத்தில்,
- சிவஞானமுனிவர்
- இராமலிங்க அடிகள்
- சி.வை.தாமோதரபிள்ளை
- சுண்ணாகம் குமாரசுவாமிப்பிள்ளை
- கதிரவேட்பிள்ளை
- உ.வே.சாமிநாதையர்
முதலியோர் பல்வேறு வகையில் உரைநடையின் வளர்சிக்காக உழைத்திருக்கின்றனர். இக்காலகட்டத்தில்,
- இலக்கிய,இலக்கண உரைகள்
- புரண இலக்கியங்களுக்கான உரைநடை
- கல்வி சார்ந்த உரைநடை
- சமய,சமூக கண்டனப் பிரசுரங்கள்
என அவை வளர்ச்சியடைகின்றன.இத்தகைய வளர்சிக்கெல்லாம் அடிப்படையாக அமைந்தது. தமிழ் பத்திரிகைகளின் தோற்றமாகும். ஈழத்தில் தோன்றிய( 1941,1மஂ மாதமஂ 7) உதயதாரகைஇத்தகைய வளர்சிப்படிகளும் மைக்கல்லாக அமைந்தது.
19ம் நூற்றாண்டின் உரைநடை வளர்ச்சியே நவீன இலக்கியங்களான நாவல், சிறுகதை, கவிதை,முதலியன தோன்றுவதற்கு அடிப்படையாக அமைந்தது.20மஂ நூற்றாண்டில் உரைநடை பல்வேறு மாற்றங்களுக்கும் வளர்ச்சிநிலைக்கும் உட்பட்டு பெரும்சாதனைகளை புரிந்துள்ளது.தனித்தமிழியக்கம், திராவிடஇயக்கம் போன்றவை உரைநடையின் போக்குகளையும் மாற்றியமைத்தது.அறிஞர் அண்ணா, மறை மலை அடிகள், திரு.வி.கலியாணசுந்தரம், கலைஞர் மு.கருணாநிதி, ஈ.வே.ராமசாமி(பெரியார்), மு.வரதராஜன் ஆகியோர் 20ம் நூற்றாண்டில் உரைநடையி்ன் பல்வேறு பரிணாமங்களைக் காட்டினர். இன்று உரைநடை ஓர் அறிவிப்புத்தமிழாக மாற்றம் அடைந்திருப்பதைக்காணலாம்.