தமிழ்மொழி வரலாற்றை ஆராய்வதற்கான அடிப்படைச் சான்றுகள்.

BA TAMIL NOTES

தமிழ்மொழி வரலாற்றை ஆராய்வதற்கான அடிப்படைச் சான்றுகள்.

மொழி வரலாறு என்பது காலத்திற்கு காலம் அல்லது காலந்தோறும் ஒரு மொழியில் ஏற்பட்டு வருகின்ற மாற்றங்களைப்பற்றி மொழியினுாடாக ஆராய்வதாகும். மொழி ஆய்வுகள் பண்டைக்காலந்தொட்டு நடந்து வந்தாலும் 19 ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தான் அறிவியல் அடிப்படையில் நோக்குகின்ற முறைமை ஆரம்பமானது. அறிவியல் துறையின் ஏற்பட்ட விரைவான மாற்றங்களையும் , முன்னேற்றத்தையும் போலவே மொழியியல் துறையிலும் ஏற்படலாயிற்று. உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றி டார்வினின் பரிணாமக் கொள்கை திருப்பு முனையை ஏற்படுத்தியது போல அதே கொள்கை இயற்கை மொழிகளின் தோற்றம் வளர்ச்சி பற்றி ஆராய வழிவகுத்தது. மொழி வளர்வது பரிணாம வளர்ச்சியினாலும் கடன்வாங்கலாலும் ஆகுமென மொழியியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். ஒரு மொழியில் பல்வேறு காலங்களில் அடைந்த மாற்றங்களை கால முறைப்படி ஆராய்வதற்கு சான்று ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. சான்றுகள் இன்றி அமையும் வரலாறுகள் உண்மை வரலாறாக இருக்க முடியாது. எந்தொரு விடயத்தையும் அறிவியல் அடிப்படையில் ஆராட்சிக்கு உட்படுத்த வேண்டுமாயின் சான்றுகள் கொண்டே ஆராயப்பட வேண்டும். இவ் அடிப்படையில் தமிழ் மொழி வரலாற்றை ஆராய பின்வருவனவற்றை சான்றுகளாக கொள்ளமுடியும்.

 1. இலக்கியங்கள்
 2. இலக்கணங்கள்
 3. அகராதிகள்
 4. நிகண்டுகள்
 5. உரையாசிரியர்களின் உரைகள்
 6. கல்வெட்டுகள்
 7. பிறமொழிகல்வெட்டுக்கள்
 8. அயல் நாட்டார் குறிப்புகள்
 9. பிற நாட்டாரின் தமிழ்மொழி இலக்காண நூல்கள்
 10. ஒப்பியல் ஆய்வுகள் (கால்டுவெல்)
 11. பேச்சு மொழி வழக்குகள்
 12. கிளை மொழிகள்

ஆகியவற்றை மொழிவரலாற்றின் அடிப்படைச் சான்றுகளாக ஏற்றுக்கொள்ளலாம்.

 1.இலக்கியங்கள்

ஒரு நாட்டின் வரலாற்றிற்கும் மொழியின் வரலாற்றிற்கும் இன்றியமையாத சான்று இலக்கியங்கள் ஆகும். சங்க இலக்கியங்களை வைத்து சங்கத்தமிழை ஆராய முடியும். எனவே அந்தந்த கலங்களில் எழுந்த இலக்கியங்களை வைத்து அந்தந்த காலத்து மொழியைப் பற்றி ஆராயலாம். இலக்கிய சான்றுகளை வகையாக பிரிக்கலாம்.

 • இலக்கிய நடையில் அமைந்த செய்யுள் நுல்கள்.
 • பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்ட வாய்மொழி இலக்கியங்கள்.

வாய்மொழி இலக்கியங்களை உண்மையான மொழியில் இயல்பைக் காட்டுவனவாகும். மொழிபேசும் சமுதாயம் என்பது படித்தவர்களும் பாமரர்களும் அடங்கியதாகும். ஆகவே வாய்மொழி இலக்கியங்கள் பெரும்பாண்மையான மக்கள் பேசும் மொழியின் இயல்பைக் காட்டுகின்றன. இன்று எமக்கு கிடைக்கின்ற பண்டைய கால இலக்கியங்கள் யாவும் காலத்திற்கு காலம் ஏடுகளில் பிரதி பண்ணப்பட்டு வந்திருக்கின்றன. இவை பிரதி பண்ணப்பட்டும் போது பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கின்றது. குறிப்பாக இடைச் செருகல் , விடுபடல், சொற்களை மாற்றி அமைத்தல், எழுத்துகளை மாற்றியமைத்தல் என பல மாற்றங்களுக்கு உள்ளாகி வந்துள்ளன. அதற்காக இவை ஆதார பூர்வம் அற்றவை என ஒதுக்கிவிட முடியாது. கிடைப்பவற்றில் எது மூலத்தோடு நெருங்கிய தொடர்புடையவை எனக் கண்டு கொண்டு மொழி வரலாற்றை ஆராய்வதற்கு பயன்படுத்தலாம்.

  02. இலக்கணங்கள்

தமிழ்மொழி வரலாற்ற்றிற்கு இலக்கியங்களைப் போன்ற இலக்கணங்களும் சான்றாகும். இலக்கியம் மொழி இயல்பை ஆராய்வதற்கு ஆதாரமானதாகும். இலக்கணம் நேரடியாக மொழி இயல்பைக் கூறுவதாகும். இலக்கியம் ஒலியன்களையும் உருபன்களையும் தன்னகத்தை கொண்டது. இலக்கணம் ஒலியன்களையும்  உருபன்களையும் சொற்களின் அமைப்பையும் நேரடியாக எடுத்தியம்புகின்றது. எனவே இலக்கணங்கள் விளக்க மொழியியல் அடிப்படையில் அமைந்ததாகும். காலத்துக்கு காலம் தோன்றிய தமிழ் இலக்கண நுல்களும் அவற்றிற்கான உரைகளும் பல்வேறு காலகாலகட்டங்களில் பல்வேறு வகைப்பட்ட இலக்கண ஆசிரியர்களாலும் உரையாசிரியர்களாலும் எழுதப்பட்டிருகின்றன. இதனால் இவற்றை ஒரு வரலாற்று ஒழுங்கில் விஞ்ஞான ஆய்வுகளாக நோக்கின் இலக்கணங்கள் சான்றுகளாக அமையும் போது சில சந்தர்ப்பங்களில் சாதகங்களும் சில சந்தர்ப்பங்களும் பாதகங்களும் உண்டு ஆனால் இலக்கண நுல்களை அடிப்படையாகக் கொண்டு ஒப்பீட்டு வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ள முடியும். உதாரணமாக தமிழ் எழுத்துக்களின் ஒலிப்பு முறைகள் பற்றி தொல்காப்பியர் கூறுவதற்கும் இடையே சில வேறுபாடுகள் காணப்படுகின்றன. இத்தகைய வேறுபாடுகளை பின்வந்த   இலக்கணகாரர்கள் கவனத்தில் கொள்ளவில்லை ஆகவே இலக்கண நூல்களை மொழி ஆய்விற்கு பயன்படுத்தப்படும் போது மிக அவதானமாக செயற்படுதல் அவசியம்.

 3.பிற நாட்டாரின் தமிழ்மொழி இலக்கண நூல்கள்

 தமிழ் மொழிக்கு இலக்கண நூல்கள் எழுதிய தமிழ்சான்றோர்கள் தவிர பிற நாட்டார்களும் தமிழ் மொழி தொடர்பான இலக்கண நூல்களை எழுதியுள்ளனர். குறிப்பாக 1672இல் பால்டீஸ் (டச்சு ) என்பவர் எழுதிய இந்தியா பற்றிய தனது நூலின் தமிழ் மொழியின் உச்சரிப்புக்கள், வேற்றுமைப்பாகுபாடுகள், விணை விகர வாய்ப்பாடுகள் என்பவற்றை குறிப்பிட்டுள்ளார். 1680இல் கோஸ்டா,பலித்தாரா போன்றோர் இலத்தீன் மொழியில் தமிழ் இலக்கணமொன்றை எழுதியுள்ளார். 1685இல் புருணோ என்பவரும் 1786இல் சீகன்பால்கு ஐயர் அவர்களும் தமிழ் இலக்கணம் என்னும் நூலை ஆங்கிலத்தில் எழுதியுள்ளார்.

இவருக்குப் பின்னர் வீரமாமுனிவர் குறிப்பிட்டத்தக்கவர். இவர் பேச்சுத்தமிழ் இலக்கணம் என்ற நூலையும்  தொன்னூள் விளக்கம் என்ற நூலையும் எழுதியுள்ளார். இவர் எடுத்து சீர்திருத்தம் என்பது தொடர்பாகவும் புதிய சிந்தனைகளை முன்வைத்துள்ளார். றேனியஸ் என்பவர் 1836 இல் தமிழ் மொழியின் இலக்கணம் என்ற நூலை எழுதியுள்ளார்.

19ம் ,20ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்களான எல்லீஸ், போப்ஐயர், கிரானின், கோல்டுவெல் முதலியோர் எழுதிய இலக்கண நூல்களும் தமிழ் மொழி வரலாற்றின் குறிப்பிட்டத்தக்கவை. எனவே மொழிவரலாற்றுச்சான்றுகளாக வெளிநாட்டார் எழுதிய இலக்கண நூல்களை ஆய்வுக்கு உட்படுத்துவது மிக முக்கியமாகும்.

4.நிகண்டுகளும் அகராதிகளும்.

ஒரு மொழியிலுள்ள சொற்கள் அனைத்தும் அகர எழுத்து வரிசையில் அமையும் படி ஒரு சேர்த்தொகுத்து அவற்றின் பொருள்களை அம் மொழியிலேனும் பிறமொழியிலேனும் விளக்கும் நூல் அகராதி ஆகும். இதனை உரிச்சொல், பனுவல் என பழைய இலக்கண நூல்கள் கூறும் சமணத்தமிழ் சான்றோர் பலரும் இத்தகைய நூல்களை இயற்றி நிகண்டு என வழங்கினார்கள்.  19 ம் நூற்றாண்டு வரையில் நிகண்டுகள் எழுதப்படுகின்றன. ஐரோப்பிய வருகையின் பின்னர் நிகண்டுகள் அருகிப்போக அகராதிகள் வெளிவரத் தொடங்கின. மொழிவரலாற்றிற்கு  இவை பெரிதும் உதவுகின்றன.

1679 இல் அந்தம்  த பிறைன்ஸா என்ற பாரதியாரால் செப்பமான முறையில் அகராதி ஒன்று தொகுக்கப்பட்டு கேரளத்தில் உள்ள அம்பலக்காட்டில் வெளியிடப்பட்டது. இன்று இது கிடைக்கவில்லை. கி.பி 1732 இல் வீரமாமுனிவரால் சதுரகராதி பன்னீராயிரம் சொற்களைக் கொண்டதாக வெளியிடப்பட்டது. வீரமாமுனிவர் இது மட்டுமன்றி மொத்தமாக ஏழு அகராதிகளை வெளியிட்டுள்ளார்.

 1. தமிழ் இலத்தீன் அகராதி
 2. இலத்தீன் தமிழ் அகராதி
 3. தமிழ் பிரெஞ்சு அகராதி
 4. தமிழ் ஆங்கில அகராதி
 5. போத்துகீசம் இலத்தீன் தமிழ் அகராதி
 6. வட்டார வழக்கு தமிழ் அகராதி
 7. சதுரகராதி

எவ்வாறெனினும் தமிழ் அகராதி வரலாற்றில் சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் பெரகராதி (Tamil LEXCAION) 1044005 சொற்கள் கொண்டதாக தொகுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் திராவிட மொழியியல் அறிஞர்களான பரோவும்  (BURROW) எமனோவும் (EMENEAU) இணைந்து வெளியிட்ட திராவிட சொற்பிறப்பியல் அகராதி திராவிட மொழியியல் உலகில் மிகப் பெரிய சாதணையாகும். எனவே தமிழ் மொழி வரலாற்றை ஆராய்கின்றவர்கள் நிகண்டுகள் அகராதிகள் ஆகியவற்றையும் கவனத்திற் கொள்ளுதல் அவசியமாகும்.

5.கல்வெட்டுக்களும் புற மொழிக்கல்வெட்டுக்களும்.

தமிழ்மொழி வரலாற்றுக்கு உதவும் சான்றுகளும் கல்வெட்டுக்களும் புற மொழிக்கல் வெட்டுக்களும் மிக முக்கியமானவையாகும். ஏனெனின் ஏடுகள் மாற்றங்களுக்கும் அழிவுகளுக்கும் உட்பட கூடியவை ஆனால் கல்வெட்டுக்கள், சாசனங்கள், செப்பேடுகள் என்பன இலகுவில் அழியக்கூடிய அல்ல.  இதன்காரணமாக இவை நம்பகத்தன்மை கொண்டனவாகவும் ஆய்வுக்கு எப்போழுதும் பயன்படுத்தக்கூடியவையாகவும் காணப்படுகின்றன. அத்துடன் இத்தகைய கல்வெட்டுக்கள் பேச்சுவழக்கை அடிப்படையாகக் கொண்டே எழுதப்பட்டுள்ளன. முனிவர்களும், துறவிகளும் குகைகளிலும் மலைச்சாரல்களிலும் வாழ்ந்த காலத்தில் அவர்களால் இத்தகைய இடங்களில் எடுத்துக்கள் பொறிக்கப்பட்டன . இவற்றிலே பேச்சுவழக்கே கையாளப்பட்டிருக்கின்றது.

உதாரணமாக:

 1. ஏற்றம் – ஏத்தம்
 2. இவருடைய – இவரிடைய
 3. அரசர் – அரசெர்
 4. வாய்க்கால் – வாக்கால்

இவை மட்டுமன்றி கல்வெட்டுகளில் உடன்படு மெய் இல்லாமல் உயிர் எழுத்துக்கள் தொடர்ந்து எழுதப்படுகின்றன.

உதாரணமாக,

 1. கோயிலுக்கு – கோஇலுக்கு.

எனவே கல்வெட்டுக்கள் தமிழ் மொழி வரலாற்றை அறிந்து கொள்ள மிக முக்கிய சான்றுகளாக அமைகின்றன.

தமிழ் மொழியில் காணப்படும் கல்வெட்டுக்கள் மட்டுமன்றி பிறமொழியில் அமைந்த கல்வெட்டுக்களும் மொழி வரலாற்றுக்கு உதவுகின்றன. குறிப்பாக இலங்கையில் கிடைத்த சிங்களக் கல்வெட்டுகளில் தமிழ்ப்பெயர்களும், தமிழ்ச்சொற்களும் காணப்படுகின்றது. அதுமட்டுமன்றி தமிழ் நாட்டிலும் பிற நாட்டுக் கல்வெட்டுக்கள் நிறையவே கண்டெடுக்கப்பட்டுள்ளன. உச்சரிப்பு  வேறுபாடுகளை உணர்ந்து கொள்வதற்கு இக்கல் வெட்டுக்கள் துணை செய்கின்றன. அரிக்க மேட்டில் கண்டெடுக்கப்பட்ட மட்கள ஓட்டில் பிராமிய எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை தமிழ் மொழி எடுத்துக்களின் வரிவடிவ ஆய்வுக்கும் மிகமுக்கியமானவை.

6. அயல் நாட்டார் குறிப்புக்கள்

வேற்று மொழிகளில் எழுதப்பட்ட தமிழ்ப் பெயர்களும், தமிழ் சொற்களும் தமிழ் மொழி வரலாற்றை கட்டியெழுப்ப உதவுகின்றன. கி.மு 2ம் நூற்றாண்டைச்சார்ந்த பதஞ்சளியும் கி.மு 4ம் நூற்றாண்டைச்சார்ந்த வரருசியும் தென்னிந்தியா பற்றியும் தென்னிந்திய சொற்களைப்பற்றியும் குறிப்பிடுகின்றனர். குமரிலப்பட்டருடைய ‘ தந்திரவர்த்திகா ‘ விலும் பானி, சமஸ்கிருதம் , பிராகிருதம், தெழுங்கு, மளையாளம், கன்னடம் போன்ற மொழிகளிலும் தமிழ் மொழி பற்றிய குறிப்புக்கள் நிறையவே உள்ளன.

இதன் பின்னர் ஐரோப்பியர்களின் வியாபார வருகையும், மதப்பரப்புதலும் காரணமாக அவர்களின் குறிப்புக்கள் அதிகமாக கிடைக்கின்றன. குறிப்பாக மார்க்கோபாலோ, யுவான்சுவாங், தொலமி ஆகியோர் எழுதிய கடிதங்களும் இத்தகைய ஆய்வுக்கு முக்கியமாயுள்ளன.

7.கிளை மொழிகள்

ஒரு மொழி வரலாற்றை ஆராய்வதற்கு கிளை மொழிகளும் முக்கியமானதாக கருதப்படுகின்றது. காரணம் ஒரே மொழி பிரதேசத்திற்கு பிரதேசம் பேசப்படும் முறையிலும் பயன்படுத்தப்படும் பொருளிலும் மாற்றங்களை கொண்டிருக்கின்றன.  உதாரணமாக மிகச் சிறந்த நாடான இலங்கையில் தமிழ் மொழி பேசப்படுகின்ற விதங்களில்

1. யாழ்ப்பாணத் தமிழ்
2. வன்னித் தமிழ்
3. மட்டக்களப்புத் தமிழ்
4. மலையகத் தமிழ்
5. கொழும்புத் தமிழ்
என பல்வேறு பிரிவுகளை நோக்க முடிகிறது.  இதே நேரம் குறித்த சமூகத்தின் கிளை மொழிகளாகவும் பல இனம் காணப்பட்டன. குறிப்பாக விவசாயச் சமூகம் , மீனவச்சமூகம் என்பன முக்கியமானவையாகும்.

எனவே ஒரு மொழியின்  வரலாற்றை அறிந்து கொள்வதற்கு மேற்கூறப்பட்ட எல்லா அம்சங்களும் முக்கியமானவையாக காணப்படுகின்றன.

BA TAMIL NOTES

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks