தமிழ் மொழி வரலாறும் இலக்கண மரபுகளும்.

BA Tamil Notes

தமிழ் மொழி வரலாறும் இலக்கண மரபுகளும்.

இப் பகுதியில் தமிழ் மொழியின் இயல்புகளை அறிவதோடு அதன் மரபுப்போக்குகளையும் காலத்திற்கு காலம் தமிழ் மொழியிலும் இலக்கணக்கூறுகளிலும் ஏற்பட்ட மாற்றங்களையும் விளங்கிக் கொள்ளுதல் அவசியம். இவ்வினாப்பத்திரத்தில் பின்வரும் விடயங்களை மிக உன்னிப்பாக அவதானித்தல் வேண்டும்.

 1.  தமிழ் மொழி வரலாறு
 2. மொழி அமைப்பும் வரலாறும்
 3. மொழி வரலாற்றுச் சான்றுகள்
 4. மொழிக்குடும்பம் பற்றிய சிந்தனைகள்.
 5. தமிழ் மொழியின் வரலாற்றுக் கட்டங்கள் {பழந்தமிழ், இடைக்காலத்தமிழ், தற்காலத்தமிழ்}
 6. தமிழ் மொழியின் வரிவடிவமும் அதன் மாற்றங்களும்.
 7. தமிழில் பிறமொழிக்கலப்பு வரலாறு
 8. தமிழில் சொற்பொருள் மாற்றமும் சொற்றொடர் மாற்றமும்
 9. தற்காலத்தமிழும், நவீன மயமாக்கல் பிரச்சிசணைகளும்.
 10. உரையாசிரியர் மரபு
 11. தமிழிலக்கண மரபு
  1. தமிழிலக்கண நூல்களின் வளர்ச்சியும் வரலாறும் குறிப்பாக தொல்காப்பியம்,. வீரசோழியம், நன்னுல், இலக்கணச் சுருக்கம் என்பன பற்றிய தெளிவு.
  2. உரையாசிரியர்களும் அவர்களின் இலக்கணச் சிந்தனைகளும் (பேராசிரியர் நாச்சினார்க்கினியர், இளம்பூரணர்)
  3. தமிழின் ஐந்திலக்கண மரபு பற்றிய தெளிவு
  4. தமிழ் இலக்கண நூல்கள் கூறும் எழுத்திலக்கணக் கோட்பாடு ( எழுத்துகளின் வகைப்பாடும் அவற்றின் தற்காலப் பொருத்தப்பாடும் )
  5. தமிழ் இலக்கண நூல்கள் கூறும் சொல்லிலக்கணக் கோட்பாடு (சொற்களின் வகைப்பாடும் அவற்றின் தற்காலக் பொருத்தப்பாடும் குறிப்பாக வேற்றுமைப் பாகுபாடு தெரிநிலை வினை, குறிப்பு வினை பாகுபாடு என்பவற்றின் முக்கியத்துவம் )
  6. தமிழ் இலக்கண மரபில் நவீன மொழியியல் சிந்தனைகள் ஏற்படுத்திய தாக்கம்.

தமிழ் மொழி வரலாறு.

மனிதன் பேச்சாலும் எழுத்தாலும் தனது கருத்தை பிறருக்கு தெரிவிக்கும் கருவி மொழி ஆகும்.மனிதன் வாழ்வதும் வழப்போவதும் மொழியாலே தான் மனித சமூதாயத்தின் மிக உன்னதமான கண்டுபிடிப்பு மொழி ஆகும். மனித வரலாற்றின் தொடக்க காலத்திலிருந்தே மனிதன் தனது கருத்தை பிறருக்கு தெரிவிக்க வேண்டிய உணர்வோடு முயன்று வந்த முயற்சியின் முற்றிய விளைவே வளர்ச்சியடைந்த இன்றைய மொழி ஆகும்.

ஒரு மொழியின் அமைப்பை விளக்குவதற்கு அடிப்படையாக அமைவது இலக்கணமாகும். மொழி மொழியால் விளக்கப்படுவதை இலக்கணமென்று ஆரம்பகாலத்திலிருந்து குறிப்பிடப்பட்டு வந்திருக்கின்றது. 2000ம் ஆண்டு பழைமை கொண்ட தமிழ்மொழி காலத்திற்கு காலம் அதன் மொழி அமைப்பில் பல்வேறு மாற்றங்களை ஏற்று வந்திருக்கின்றது. மொழி பல்வேறு தேவைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. குறிப்பாக ஒரு மனித சமுதாயத்தின் பண்பாடு, பழக்கவழக்கங்கள், விழுமியங்கள், நம்பிக்கைகள், சடங்குகள் போன்ற எல்லா அம்சங்களையும் மொழி தாங்கி நிற்கின்றது. இதனாலேயே மொழியை பண்பாட்டு ஊர்தி அல்லது பண்பாட்டு காவி என குறிப்பிடுவர். மொழி இரண்டு அடிப்படை நோக்கங்களைக் கொண்டது.

 1. பயன்பாட்டு நோக்கம்.
 2. பண்பாட்டு நோக்கம்.

பழந்தமிழ் இலக்கணங்கள் நீண்டகாலமாக எழுத்திலக்கணத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றது. ஆனால் தற்கால மொழியியலாளர்கள் பேச்சுவழக்கிற்கு முக்கியத்துவம் கொடுப்பதை அவதானிக்க முடிகிறது. ஏனெனின் ஒரு மொழி பேச்சில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மொழி கேட்டல் , வாசித்தல், எழுதுதல் என விரிவடைந்து செல்வதை அவதானிக்க முடிகிறது. எனவே பழந்தமிழ் இலக்கண நூல்கள் யாவும் ஒரு மனிதனின் சமூதாயத்தின் வளர்ச்சி அடைந்த மொழித்திறனான எழுத்திற்கே முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றது. என்பதை தெளிவாக புரிந்துகொள்ளலாம். அதனாலேயே இன்றைய மொழியலாளர்கள் ஓவியனியல், உருபனியல், தொடரியல் ஆகிய அம்சங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கின்றனர். மக்கள் தங்கள் கருத்துகளை பரிமாறிக்கொள்வதன் மூலம் சமூகம் வளர்ச்சியடைகின்றது. இந்ந கருத்துப்பரிமாற்றத்தை சைகை, குறியீடு போன்றவற்றின் மூலமும் தெரிவிக்கலாம். ஆனால் இவற்றின் மூலம் நுணுக்கமான கருத்துக்களை உணர்த்த முடியாது. பேச்சொலிகள். உடாகவே சொற்களை ஆக்க முடியும் எனவே கருத்துப்பரிமாற்றத்தில் மொழியும் மொழியின் ஒலியும் சிறப்பாக கருதப்படுகின்றன.

தமிழ் மொழியின் வரலாற்றை ஆய்வு செய்கின்றவர்கள் மூன்று முக்கிய காலகட்டங்களாக வகுத்து நோக்குவார்கள்.

 1. பழந்தமிழ்க்காலம் (சங்ககாலம், சங்கமருவியகாலம் )
 2. இடைக்காலத்தமிழ் (பல்லவர், சோழர், நாயக்கர்காலத்தமிழ் )
 3. தற்காலத்தமிழ் (ஐரோப்பியர் காலம் தொடக்கம் இன்று வரையும் )

இவற்றை ஆராய்கின்றவர்கள் அக் கால இலக்கண நூல்களை மட்டுமன்றி பல்வேறு சான்றுகளையும் முக்கியப்படுத்தி நோக்குவர்.
1800 களின் பின்னர் மொழி பற்றிய ஆய்வுகள் புதிய அணுகுமுறையோடு நோக்கப்பட்டு வருவதை அவதானிக்கலாம். அதிலும் குறிப்பாக 1856 ல் கால்டுவெல் (COLD WELL) எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூல் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. இந்த மாற்றத்தோடு தமிழ் மொழி பற்றி நாம் கொண்டிருந்த பொற்கால கனவுகள் யாவும் சிதறிப்போகின்றது. காரணம் தென்னிந்திய மொழிகளில் தமிழ் மொழி மாத்திரம் தனித்த ஒப்பற்ற மொழியல்ல அதனோடு சம்பந்தப்பட்ட அதே சாயல் கொண்ட பல்வேறு மொழிகள் உண்டென்று அவற்றை ஒரு குடும்பமாக நோக்கலாம் என்ற சிந்தனையும் தோன்றியது அதனால் மொழி பற்றிய ஆராட்சி அல்லது நோக்கு மாறத்தொடங்கியது.

திராவிட மொழி அல்லது மொழிகுடும்பம் என்று சிந்திக்கின்ற போது திராவிட மொழிகளில் மிகப் பழமையான இலக்கியங்களையும், இலக்கணங்களையும் கொண்டதாக தமிழ் மொழி காணப்படுகிறது. பழமைக்கு பழமையாய் புதுமைக்கு புதுமையாய் நெகிழ்ந்து சென்று வளர்கின்ற ஒரு மொழியாக – உலக மொழிகளில் சவால்களுக்கு ஈடுகொடுத்து அறிவியல் தமிழ் என்கின்ற ஒன்றை தனக்குள் உள்வாங்கிக் கொண்டு வளர்ந்து வருகின்றது. இதே நேரம் சங்ககாலத் தமிழுக்கும் தற்காலத் தமிழுக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. மொழியானது காலத்திற்கு காலம் மாறிக் கொண்டே இருக்கும் “கடிசொல் இல்லை காலத்துப் படினே” என்று தொல்காப்பியரும் “ பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வலுவல வகையினானே” என்று நன்னுலாரும் குறிப்பிட்டுள்ளார். மொழி வளர்வது பரிணாம வளர்ச்சியினாலும் கடன் வாங்கலாலும் என்பர் மொழியியல் அறிஞர்கள்.

மொழி வரலாறு என்பது மொழியில் ஏற்படும் ஒலியனியல் மாற்றம் , உருபனியல் மாற்றம் , சொற்றொடர் அமைப்பு மாற்றம் (தொடரியல்) சொற்பொருள் மாற்றம், சொற்கோவை மாற்றம் ஆகிய மாற்றங்களை ஆராய்வதாகும். தமிழ் மொழியின் வரலாற்றை இலக்கியம், இலக்கணம், கல்வெட்டு போன்ற பல்வேறு சான்றுகளின் ஊடாக ஆராயலாம்.

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks