திராவிட மொழிக்குடும்பம்

திராவிட மொழிக்குடும்பம்

திராவிடம் என்ற சொல் தமிழ் என்ற சொல்லின் திரிபு என மொழியியலாளர்கள் சிலர் குறிப்பிடுவர். இந்தியநாடு முழுவதுவும் மிகப்பழங்காலத்தில் ஒரு மொழியே பேசப்பட்டது எனவும் அதனைப் ‘பழங்காலத்திராவிட மொழி’ எனவும் அறிஞர்கள் குறிப்பிடுவர். இந்திய உபகண்டமும், இலங்கையும் ஒரு காலத்தில் திராவிட நாடாக இருத்திருகின்றது என மொழியியல் அறிஞர்கள் தங்களது ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட எழுத்து வடிவங்கள் கூட திராவிட மக்களின் நாகரீகத்திற்கும் அவர்களின் வரிவடிவத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக சாசனவியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆனால் இவ்விடத்தில் ஒரு வினா தோன்றுகின்றது. அதாவது இங்கு வழங்கப்பட்டு வந்த மொழி திராவிடம் தானா? என்ற நிச்சயமற்றதன்மை காணப்படுகின்றது.

எனவே தொகுத்து நோக்குமிடத்து ஆரியர் வருகைக்கு முன் இந்திய உபகண்டத்தில் பேசப்பட்ட மொழி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சார்ந்ததல்ல என்றும் திராவிட மொழியாக அல்லது திராவிட மொழியின் ஆரம்பமாக ஏற்றுக்கொள்ளலாம் என்று மொழியின் ஆரம்பமாக ஏற்றுக்கொள்ளலாம் என்று மொழி வரலாற்று அறிஞர்கள் கூறுவர்.

பிற்காலத்தில் திராவிட மொழியை பேசும் நாடு திராவிட நாடு என்று குறிப்பிடப்பட்டது. விந்திய மலைக்கும்(ஒரிஷா, மராத்தி, குஜராத்தி என்னும் மொழிகள் பேசும் பிரதேசங்கள் தவிர்ந்த)  கன்னியாக்குமாரிக்கும் இடைப்பட்ட நாடு எனக்குறிப்பிடப்படுகிறது. திராவிட மொழிக்குடும்பத்திற்கு ஐரோப்பிய அறிஞர்கள் ஆரம்பத்தில் வழங்கிய பெயர் தமிழ் மொழிக்குடும்பம் என்பதாகும். முதல்முதலில் கோல்டுவெல் அவர்களே திரவிடமொழிக்குடும்பம் என்ற பெயரை பயன்பாட்டிற்கு கொண்டுவந்தார். திராவிடம் என்ற சொல் தமிழரையும் தமிழ் மொழியையும் சிறப்பாக குறிப்பதாக இருந்தாலும் தென்னிந்தியாவில் பேசப்படும் மொழிகள் பலவற்றையும் பொதுவாக குறிப்பதற்காகவே கோல்டுவெல் திராவிட மொழிக்குடும்பம் என்ற பெயரைபயன்படுத்தினார்.

திராவிட மொழிக்குடும்பம் பற்றிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட பின் இருபத்தைந்துக்கு மேற்பட்ட மொழிகள் இக்குடும்பத்தை சார்ந்தனவென இணங்காணப்பட்டுள்ளது

 1. தமிழ்
 2. தெலுங்கு
 3. மலையாளம்
 4. கன்னடம்
 5. துளு
 6. ஓரான்
 7. கொண்டி
 8. கூயி
 9. கோந்த்
 10. கோயா
 11. பிராகூய்
 12. மால்டோ
 13. குடகு
 14. படகா
 15. கொலாம்
 16. இருளா
 17. குரவா
 18. பாத்ஜி
 19. கொண்டா
 20. கதபா
 21. நாயக்கி
 22. பெங்கோ
 23. கொட்டா
 24. தோடா
 25. ஒள்ளாரி

இவ்வாறு இனங்காணப்பட்ட 25 மொழிகளையும் இதன் இயல்பு நோக்கி,

 • தென்திராவிடமொழிகள்
 • மத்தியதிராவிடமொழிகள்
 • வடதிராவிடமொழிகள்

எனப்பிரித்து பார்க்கின்ற தன்மையும் உண்டு, தென் திரவிட மொழிகளும் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் குறிப்பிடப்படுகின்றன. இந்தத்திராவிடமொழிகளும் தமிழ் மாத்திரமே தென்னாடு தவிர்ந்த தென்னாட்டிற்கு வெளியேயும் பர்மா, மலேசியா, சிங்கப்பூர், பிஜித்தீவுகள்,இலங்கை, மடகஸ்கார்,கயானா போன்ற நாடுகளிலும் பேசப்படுகின்றது. ஆயினும் இன்று ஈழத்தமிழர்கள் உலகெங்கும் பரவியிருப்பதன் காரணமாக உலகெங்கும் பேசப்படுகின்ற ஒரே ஒரு திராவிட மொழியாக தமிழ் கணிக்கப்பட்டிருக்கின்றது. ஏனைய திராவிட மொழிகள் அனைத்தும் இந்திய உபகண்டத்துக்குள் மாத்திரமே பேசப்பட்டு வருகின்றது. எனவே தென் திராவிட மொழிகளுள் தமிழ் முக்கிய மொழியாக கருதப்பட்டுவருகின்றது.

தென்திரவிட மொழிகளுள் தமிழ்,மலையாளம்,கன்னடம் ஆகியவற்றிற்குள்ளே நிறைந்த ஒற்றுமைகள் காணப்படுகின்றன.

இலக்கணக்கூ றுகள்

தமிழ்

மலையாளம்

கன்னடம்

1.    தன்மைஒருமை யான் ஞான் நான்/ஆண்
2.    தன்மைப் பன்மை நாம்/யாம் நாம் நம்
3.    முன்னிலை  ஒருமை நீ/நீர் நீர் நீன்
4.    முன்னிலை பன்மை நீர்கள் நீம் நீன்
5.    படர்க்கை ஒருமை தாம்/தம் தான்/தன் தான்
6.    படர்க்கை பன்மை தாம்

தாங்கள்

தாம்

தாங்கள்

தாம்

தாவு

7.    சுட்டுப்பெயர்கள் அது

அவன்

அவள்

அது

அவன்

அவள்

அது

அவம்

அவள்

8.    வினாப்பெயர்கள் யார் யார் ஆர்
9.    எண்ணுப்பெயர்கள் ஒன்று

பத்து

எட்டு

நூறு

ஒன்று

பத்து

எட்டு

நூறு

ஒன்று

பத்து

எட்டு

நூறு

10.  வேற்றுமை உருபுகள்

ஆல்

இல்

ஆல்

இன்

ஆல்

இன்

ஆகவே திராவிட மொழிக்குடும்பத்தில் அடையாளம் காணப்பட்ட மொழிகள் எதோ ஒரு வகையில் ஒற்றுமைப்பட்டு நிற்பதைக்காணமுடிகின்றது.சில இடங்களில் முதல் குறுகியும் சில இடங்களில் முதல் நீண்டும் சில இடங்களில் இறுதி எழுத்துக்கள் திரிபடைவதையும் அவதானிக்கலாம். இனங்காணப்பட்டுள்ள 25 திராவிட மொழிகளில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகியவற்றிலே எழுத்து வடிவமும்,இலக்கிய வளமும் காணப்பட்டுள்ளது. ஏனைய மொழிகளில் அதிகமானவை எழுத்து வழகில்லதவை. பேச்சு வழக்ககை மாத்திரமே கொண்டிருகின்றன. இது திராவிட மொழிகளில் மாத்திரமின்றி இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பதிலும் இவ்வியல்பு கானப்படுகின்றது.

திராவிட மொழிகளில் தமிழ்மொழி தனக்கான சில   சிறப்பியல்புகளை கொண்டு காணப்படுகின்றது. தமிழ் தென் திராவிட மொழிகளில் முக்கியமான மொழியாகவும் தொன்மை திராவிட மொழிகளில் தொன்மை வாய்ந்த மொழியாகவும் காணப்படுகின்றது. எவ்விதமான முன் உதாரணமும் இல்லாத தனக்கான இலக்கிய வளத்தையும் கொண்டுள்ளது.

வடமத்திய திராவிட மொழிகளில் பெண்பால் விகுதிகள் அஃறிணையில் அடக்கப்பட்டிருக்கும். ஆனால் தென் திராவிட மொழியில் ஆண்பால் பெண்பால் ஆகியன உயர்திணையில் அடக்கப்படும்.

 • இகரம் ஒகரம் மாறும் இயல்பு தென்திரவிட மொழிகளில் காணப்படும் இயல்பாகும்.
 • தொல்திராவிடத்தில் காலம் காட்டும் இடைநிலைகள் த்,ந்த் போன்றவை பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தென் திராவிட மொழிகள் தமிழ்மொழி சிறப்பு வாய்ந்ததாகவும் தொல்திராவிட மொழியை நோக்கிச் செல்லுகின்ற இயல்பும் மூலத்திரவிடமொழி ஒலியன்களில் தமிழ் ஒலியன்கள் வேறுபடாதிருப்பதுவும் மூலத்திரவிடமொழியிலே யகரம் முதனிலையாகக் கொண்ட சொற்கள் இன்றும் வழங்கிவருவதுவும் வல்லெழுத்துக்களின் ஆற்றலைகுறைத்து மூக்கின எழுத்துக்களைப் பொருத்தும் பண்பும், வடமொழியின் தாக்கம் மிகக்குறைந்து காணப்படுவதுவும் திராவிட மொழிகளில் தமிழ் மொழிக்குரிய இடத்தினையும், சிறப்பினையும் உணர்திநிற்கின்றது. எனவே திராவிட மொழிகளின் தாய்மொழியாக தமிழ் மொழியைக்கருதலாம் என மொழியியல் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

BA Tamil Notes

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks