மொழிக்குடும்பம் பற்றிய சிந்தனைகள்

மொழிக்குடும்பம் பற்றிய சிந்தனைகள்

கருத்தை தெளிவாகவும் செம்மையாகவும் புலப்படுத்துவதற்கு மொழி இன்றியமையாதது. ஒலிவடிவமும் வரிவடிவமும் சேர்ந்தமைந்த அம்சமே மொழி எனப்படும். எனினும் ஒலிவடிவத்தில் மட்டும் அமைத்த மொழிகளும் உள்ளன. இன்று உலகில் பல்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. இம் மொழிகள் தனித்தனியாக தோன்றியவையா அல்லது மூலஒலியில் இருந்து பிரிந்தது சென்றவையா? என்ற வினாவுக்கு விடைகாணும் முயற்சியில் மொழியியலாளர்கள் முனைந்தனர். இம்முயற்சியின் விளைவாக எழுத்ததே மொழிக்குடும்பம் பற்றிய கோட்பாடாகும்.

விஞ்ஞானத்துறையில் ஏற்பட்டதுரிதமான வளர்ச்சி காரணமாக மொழி ஆய்வுத்துறையும் இந்த விஞ்ஞான வளர்ச்சி பாதித்தது. குறிப்பாக டார்வின் ஏற்படுத்திய பரிணாமக்கொள்கை, உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய்ந்தது போல மொழியியற்த் துறையிலும் அறிஞர்கள் மொழியின் தோற்றம், வளர்ச்சி அதன் மாற்றங்கள் என்பன பற்றி ஆராயமுற்பட்டனர். இந்த ஆராய்வின் பயனாக உயிரினங்களுக்குள்ளே அடிப்படையில் தொடர்புடைய மொழிகளை குடும்பங்களாக காணும் முயற்சி மொழியியல் துறையில் ஏற்பட்டது.

உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய டார்வினின் பரிணாமக்கொள்கை மொழியின் தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய்வுக்கு வழிவகுத்தது. ஒரு மூல தோற்றம், வளர்ச்சி பற்றி ஆராய்மொழி பல தனிப்பட்ட மொழிகளாக பிரிந்து காலத்தாலும் இடத்தாலும் வெவ்வேறு மாற்றமடைந்து வேறு மொழிகள் போன்று தோன்றினும் அம்மொழிகளின் பொதுப்பண்புகள்  பல ஒன்றாக காணப்படுமாயின் அவை ஒரு மொழிக்குடும்பத்தை சேர்ந்தன எனப்படும்.

இந்த மொழிக்குடும்ப செயற்பாடு பற்றிச்சிந்திக்க முற்ப்பட்டபோது, பல வினாக்கள் தோன்றின. மொழிக்குடும்பம் எவ்வாறு அமைத்தது? ஒரு மூல மொழி பேசிய மக்கள் எவ்வாறு பிரிந்து நின்று புதிய மொழியை தோற்றிவித்தனர்?,ஏன் இவர்கள் பிரித்தனர்? போன்ற வினாக்கள் எழுந்தன. இந்த வினாக்களுக்கான விடைகள் ஊடகங்களாக அமைந்தனவே தவிர ஆதாரபூர்வமான விஞ்ஞானசான்றுகள் வளர்ச்சியடைய தொடங்கியபோது,பழமையான மொழிபற்றிக் கொண்டிருந்த ஐதீகக்கதைகள் அகவையக்கருத்துக்கள் என்பன விமர்சனத்துக்குள்ளாகின.

பல தொடர்புள்ள மொழிகளை ஒப்பு நோக்கி ஆராய்கின்ற முறைமை 19ம் நூற்றாண்டில் உலகெங்கும் வளர்ச்சியடையத்தொடங்கியது. 19ம் நூற்றாண்டில் இருந்து மரபிலக்கண நூல்கள் எழுதும் மரபு குறைத்து போக மொழிகளை-நாகரீகங்களை-சமூகங்களை-இலக்கியங்களை ஒப்பிட்டு ஆராய்கின்ற ஒப்பியல் ஆய்வுத்துறை வளர்ச்சியடைத்தது. இந்த அடிப்படையில் சொற்களில் ஒற்றுமை, இலக்கண அமைப்பில் ஒற்றுமை, எண்ணுப்பெயர்களில் ஒற்றுமை, மூவிடப்பெயர்களின் ஒற்றுமை என்பன போன்ற பல்வேறு இயல்புகள் ஆராயப்பட்டு மொழிக்குடும்பம் என்ற கோட்பாடு உருவாக்கப்பட்டது.

இந்த வகையில் உலகில் பேசப்பட்ட பல மொழிகளை ஆராய்ந்த மொழியியல் அறிஞர்கள் இந்தோ ஐரோப்பிய மொழி என்ற மொழிக்குடும்ப கோட்பாட்டை உருவாக்கினர். இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பமே இன்றைய உலகில் மிகச் செல்வாக்கு பெற்றுவிளங்கும் மொழிக்குடும்பமாகும். பின்லாந்து, ஹங்கேரி போன்ற சில நாடுகளை தவிர ஐரோப்பியயாவில் பேசப்படும் மொழிகள் யாவும் இம்மொழிக்குடும்பதைச்சார்ந்தவையாகும்.இம்மொழிகள் தொடர்பான ஆய்வுகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்படமையினால் இம் மொழிக்குடும்பம் பற்றிய கருத்தினை உலகில் சிறப்பாக நிலைநிறுத்த முடிந்துள்ளது.

இந்திய வரலாற்றாய்வில் தென்னாடு பற்றிய ஆய்வுகள் காலத்தால்  பிற்பட்டே மேற்கொள்ளப்பட்டது. அது போலவே திராவிட மொழிக்குடும்பம் பற்றிய ஆய்வுகளும் மிகப்பிற்பட்ட காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டன. அன்றைய காலச்சூழ்நிலையே அதற்கு காரணமாக அமைந்தது.எவ்வாறாயினும் கி.பி 8ஆம் நூற்றாண்டளவில் குமரிலப்பட்டலர் என்பவருடைய “தந்திரவர்த்தகா” என்ற நூலில் ‘ஆந்திர திராவிட பாஷா”என்ற தொடர்புடன் திராவிட மொழிக்குடும்பம் பற்றிய ஆய்வுகள் ஆரம்பமாயின எனக்கூறலாம்.

19ம் நூற்றாண்டில் ஆரம்பத்தில் கிழக்கிந்திய கம்பனியை சேர்ந்த எல்லிஸ் என்பவர் தனது கட்டுரை ஒன்றில் மிக நெருங்கிய உறவு கொண்ட மொழிகள் பற்றிய ‘தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம்’ கூறியுள்ளார். எனினும் 1856ல் கோல்டுவெல் எழுதிய திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்(A COMPARATIVE GRAMMAR OF THE DRAVIDIAN LANGUAGES – COLDWELL) என்னும் நூலுடனேயே திராவிட மொழிக்குடும்பம் பற்றிய ஆய்வுகள் குறிப்பிடத்தக்க வகையில் வேகம் பெறத்தொடங்கியது. குறிப்பாக ‘திரவிட’ என்னும் குடும்ப மொழிகள் பற்றி நிரூபிக்கதத்தக்க ஆய்வுமுறைமைகளுக்கு கோல்டுவெல் அவர்களே வித்திட்டவர் என்பதை மறுக்க முடியாது.

திராவிட மொழிகள் அனைத்திற்கும் ஒரு மூல மொழி உண்டு என்று கருதப்படுகின்றது. மூலத்திராவிடமொழி அல்லது தொல்திராவிட மொழி எனக்குறிப்பிடுகின்றனர்.இந்த வகைள் மூலத்திராவிடமொழியில் இருந்து பிரிந்து வளர்ந்த தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய நான்கு இலக்கியவளம் உள்ள மொழிகளையும் வேறு எட்டு இலக்கியவளம் இல்லாத மொழிகளையும் ஆராய்ந்து திராவிட மொழிக்குடும்பத்தை சேர்ந்ததென்று கோல்டுவெல் நிறுவினார். ஆனால் பாலுகோல்டுவெல்லுக்குப் பின்வந்த மொழியியல் அறிஞர்கள் பலர் மேலும் எட்டு மொழிகளினை திராவிட மொழிக்குடும்பத்தினுள் சேர்த்துள்ளனர்.

தென்னாட்டில் வழங்கும் மொழிகளை விட பாகிஸ்தான், பலுசிஸ்தான், வடஇந்தியா, மத்திய இந்தியா ஆகிய இடங்களில் வழங்கப்பட்டு வருகின்ற சில மொழியும் திராவிட மொழிக்குடும்பத்தில் அறிஞர்கள் பரோ,எமனோ, அகத்தியலிங்கம், கமில்சுவலபில், ஆந்திரநோவ், கிருஷ்ணமூர்த்தி, வி.ஈ.சுப்ரமணியம் முதலியோரின் ஆய்வுகளினால் திரவிடமொழிக்குடும்பம் பற்றிய வலுவாக கொள்கைகள் முன்வைக்கப்பட்டிருப்பதோடு ஆய்வுத்தளத்தின் பரப்பும் விரிவடைந்துள்ளது. கோல்டுவேல் அவர்களின் திரவிடமொழிக்குடும்பத்தில் வருகின்ற பன்னிரெண்டு மொழிகளும் பின்வருமாறு காட்டப்பட்டுள்ளது.

 1. தமிழ்
 2. தெலுங்கு
 3. மலையாளம்
 4. கன்னடம்
 5. துளு
 6. குடகு
 7. துத
 8. தோத
 9. கோந்த்
 10. கூயி
 11. ஓரான்
 12. ராஜ்மஹால்

BA Tamil Notes

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks