தமிழ் வரிவடிவ வளர்ச்சி

தமிழ் வரிவடிவ வளர்ச்சி

தமிழ் வரிவடிவ வளர்ச்சி. மனித சமுதாயம் வளர்ச்சியடைவதற்கு மொழி முக்கியமானது மனித சமுதாயத்தில் பேச்சுமொழி, எழுத்துமொழி என இருவகையுண்டு உலகில் பெரும்பலான மொழிகள் எழுத்து வடிவம் பெற்றிருக்கவில்லை சிறுபான்மை மொழிகளே வரிவடிவம் பெற்றமொழிகளாக உள்ளன ஒரு மொழியின் செம்மையான வளர்ச்சியே வரிவடிவக் கண்டுபிடிப்பாகும். ஒரு சமூகத்தால் உச்சரிக்கப்படுகின்றன அல்லது பேசப்படுகின்றன சகல ஒலிவடிவங்களுக்கும் ஏதோ ஒரு அடையாளத்தைக் கொடுப்பதே வரி வடிவாகும்.

இன்று வரையில் இனங்காணப்பட்டுள்ள 25 திராவிட மொழிகளில் தமிழ், தெலுங்கு மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளுக்குத்தான் எழுத்து வடிவம் உண்டு எனவே பேச்சுமொழியினை வரிவடிவில் காட்டுவதுதான் எழுத்து மொழி என இன்று கூறாது  எழுத்து மொழிக்குரிய முக்கிய பண்பு நாடுகடந்து காலம்கடந்து நிற்கின்ற பண்பாகும். ஒரு இனத்தின் பண்பாடும் அறிவும் கலாசாரமும் நாகரிகமும் அவ் இனத்தின் எழுத்து மொழியால் பொதிந்து கிடக்கிறது. எழுத்து மொழி இல்லையேல் மனித வாழ்வின் தொடர்ச்சியான முன்னேற்றம் இருக்காது.

எழுத்துருவம் பெற்றமொழிகளே நாகரீக மொழிகள் என்றும் சிறந்த மொழிகள் என்றும் கருதப்படுகின்றது. திராவிட மொழிகளிலே தமிழ் மொழிகளிலே மிகப் பழமையான எழுத்துருவத்தைக் காணமுடியும் தெலுங்கு மொழியின் எழுத்துருவம் கி.பி 7ம் நூற்றாண்டிலும் கன்னடக மொழியின் எழுத்துருவம் கி.பி 5ம் நூற்றாண்டிலும் மலையாள கால மொழியின் எழுத்துருவம் 4ம் நூற்றண்டிலும் தோன்றியதென ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

இந்திய மொழியின் தமிழும், சமஸ்கிருதமும் சமகாலத்தில் எழுத்துருவை ஆக்கிக்கொண்டன என கூறப்படுகின்றன.

இன்று ஆங்கில மொழி அணைத்துலக மொழியாக இருந்தாலும் கிரேக்கமும், இலத்தீனும் தான் உலகத்தில் மிகப் பழமையான மொழி எனக் குறிப்பிடுகிறது. உலகத்தின் பல்வேறு நாகரிகங்கள் இருப்பது போல இன்றைய உலகில் பல்வேறு வகையான எழுத்து முறை உள்ளன.

 • கிரேக்க எழுத்து முறை
 • உரோமன் எழுத்து முறை
 • அரேபிய எழுத்து முறை
 • எகிப்து நாட்டு கீரோ கிளிப்பிக் எழுத்து முறை
 • இந்திய எழுத்து முறை

                                           எனப் பல்வேறு முறைகள் கையாளப்பட்டு வருகின்றது. இவ்வாறு இவற்றைப் பிரித்தாலும் இன்றைய வரிவடிவவியலாளர்கள் 3 எழுத்து முறைகளை அடையாளப்படுத்துகின்றனர்.

 1. பட எழுத்து முறை
 2. எண்ண எழுத்து முறை
 3. ஒலி எழுத்து முறை
 4. அசையேழுத்து முறை
 5. அகர எழுத்து முறை

மேற்குறிப்பிட்ட எழுத்து முறைகளில் முதல் முதலில் தோன்றியது பட எழுத்துமுறையாகும். படத்தினை வரைந்து அதனுடாக அந்தச் செய்தியை வெளிகாட் டுதலாகும் வளர்ச்சியடைந்த எழுத்து முறை அகர எழுத்து முறை ஆகும். பெரும்பாலான உலகமொழிகள் இன்று அகர எழுத்து முறையையே பின்பற்றுகின்றன எத்தனையோ நூற்றாண்டுகளின் பின்னர் தான் அகர எழுத்து முறை கண்டுபிடிக்கப்பட்டது.

தமிழ் எழுத்துகளின் தோற்ற வளர்ச்சியைப்பற்றி விஞ்ஞான பூர்வமான ஆய்வுகள் எவையும் இன்றுவரையில் மேற்கொள்ளப்படவில்லை எனலாம். பழந்தமிழ் நூல்கள் அச்சிடத் தொடங்கியதன் பின்னரே வரிவடிவம் பற்றிய சிந்தனை ஏற்பட்டது. இன்றைய தமிழ் எழுத்து வடிவம் வளர்ச்சியடைவதற்கு முன்னர் தமிழ் மொழி.

 • பிராமிய எழுத்து முறை
 • வட்டெழுத்து முறை
 • கிரந்த எழுத்து முறை
 • தமிழ் எழுத்து

ஆகிய நிலைகளிலிருந்து  வளர்ச்சியடைந்ததெனலாம். மிகப் பழமையான குகைக்கல்வெட்டுக்களில் பிராமி எழுத்து வடிவம் பயன்பட்டது. பாண்டிநாட்டிலுள்ள பல குகைக்கல்வெட்டுக்களிலும் இலங்கையில் காண்டுபிடிக்கப்பட்ட பல குகைக்கல்வெட்டுக்களிலும் இத்தகைய எழுத்து வடிவம் பயன்படுகிறது. கி.மு 3ம் நூற்றாண்டிலும் ஈழத்திலும், தமிழ்நாட்டிலும் காணப்படுகின்ற கல்வெட்டுகளில் பிராமி எழுத்துக்களே இருப்பதாக கே.பி சுப்பிரமணிய ஐயார் , 2 மகா தேவன் ஆகியோர் குறிப்பிடுகிறார். கே.கே பிள்ளை அவர்கள் பிராமி எனும் எழுத்து வடிவம் தமிழ் எழுத்து வடிவமே என குறிப்பிடுகிறார்.  தொல்பொருள் ஆய்வுத்துறையினரும் தங்கள் ஆய்வுகளின் போது கண்டெடுத்த 3௦ க்கு மேற்பட்ட குகைக்கல்வெட்டுக்களில் இருக்கின்ற எழுத்து  வடிவம் பிராமி எனினும் அது தமிழ் எழுத்து வடிவமே என டாக்டர் நாகசாமி அவர்கள் குறிப்பிடுகிறார்.

குகைக்கல் வெட்டுக்களில் காணப்படுகின்ற எழுத்து வடிவம் பிராமி என்றும் அந்தப்பிராமி எழுத்து வடிவத்திலிருந்து  வந்தது தமிழ் என்றும் சிலர் குறிப்பிடுகிறார். ஆரம்பகாலத்தில் இருந்து இதனை மறப்பவர்களும் உண்டு பல்லவர்கால கிரகந்த எழுத்துக்கு முன்னர் தமிழ் மொழிக்கென தனியெழுத்துக்கள்  கிடையாதெனவும் பிராமிய எழுத்தைத்தான் நம்பி இருந்தனர் என்றும் கூறுவார். “ மெகஸ்தனிஸ்” அவர்கள் தனது பயணக்குறிப்பொன்றில் இந்தியர்களுக்கு எழுத்துவடிவம் கிடையாது எனக்குறிப்பிட்டுள்ளார். ஆனால் இதனை கே.கே பிள்ளை அவர்கள் மறுக்கின்றார்.

சிந்துவெளியின் சித்திர எழுத்துக்களே திராவிடப் பழங்குடியினரது எழுத்துக்களின் மூலவடிவமாக இருக்கலாமென (‘ஹீராஸ்’ HERAS )  என்பவர் குறிப்பிடுகிறார். ஆனால் சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட எழுத்துக்களைப்பற்றி தீர்க்கமான முடிவுகள் எவையும் எடுக்கப்படவில்லை. திராவிட எழுத்துகளின் ஆய்வுகள் முடிந்தமுடிவாக வரும் போது தான் தமிழ் எழுத்துகளின் தோற்ற வளர்ச்சியைப்பற்றி அறிய முடியும்.

அசோகர் காலத்திலேயே பிராமிய எழுத்து இருந்ததென சிலரும் சிந்துவெளி எழுத்துக்களில் இருந்து பிராமி தோன்றியிருக்க வேண்டுமென சிலரும் கருதுகின்றனர். எதுவாயினும் பிராமி எழுத்து வடிவம் இந்திய எழுத்து வடிவங்களின் தாயாக கருதாது இவ்வடிவம் பல்வேறு நிலைகளில் வளர்ந்தும் திரிபுற்றும் திகழ்ந்தி+ன. பிராமி எழுத்து முறையில்

( வட பிராமி  ,   தென்பிராமி )

என இருவகையாகப் பிரிப்பர் தென்பிராமியை “திராவிடி” என அழைப்பர். இவற்றில் தொல்காப்பிய காலத்துக்கு பழந்தமிழுக்குரிய ஒலிவடிவங்கள் பயன்பட்டன.

பிராமிய எழுத்தை “தமிழி” எனவும் குறிப்பிட்டனர். இந்த எழுத்து வடிவத்தில் தான் சங்க இலக்கியங்கள் எழுதப்படிருக்கவேண்டுமென்று நடனகாசிநாதன் குறிப்பிடுகின்றார். எப்படியாயினும் கி.மு 3ம் நூற்றாண்டு , கி.பி 4ம் நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் எழுதப்பட்ட மிகப்பழைமையான கல்வெட்டுக்கள் பிராமி எழுத்தில் எழுதப்பட்டது என்பது தெளிவாகின்றது.

தமிழகத்தில் வடமொழியை எழுத தொன்று தொட்டு பயன்படுத்தப்பட்டு வந்த எழுத்தையே கிராந்தம் என்பர். வட மொழியில் கிரந்தம் எனின் நூல் எனப் பொருள்படும். தமிழகத்தில் வட மொழியை எழுத வழங்கிய எழுத்தும் ஒன்று போல இருந்தது. குகைக்கல்வெட்டுக்களில் எழுதப்பயன்படுத்திய வடமொழி எழுத்துக்களே கிரந்த எழுத்துக்களின் முன்னோடியாகும்.

பல்லவர் காலத்தில் கிரந்த எழுத்துக்களின் வளர்ச்சியைக் காணலாம். பல்லவர் காலத்தில் வழங்கிய கிரகந்த எழுத்தை பல்லவ கிரந்தமெனக் கூறுவர். நரசிம்மவர்மன் காலத்தில் கிரந்த எழுத்தில் மிகச் சிறப்பாக கல்வெட்டுக்கள் பொறிக்கப்பட்டன. குறிப்பாக வேள்விக்குடி கல்வெட்டு தலபாய்புறம் செப்பேடுகள், தகடூர்க்கல் வெட்டுக்கள் முதலியவற்றில் கிரந்த எழுத்துகளைக் காணலாம். சோழ அரசர்களும் கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தி இருக்கின்றார்கள். இவர்களின் கல்வெட்டுக்கள், செப்பேடுகள், நாணயங்கள் முதலியவற்றில் கிரந்த எழுத்துக்களை காணலாம். நாயக்கர் கால மன்னர்களும் கிரந்த எழுத்துக்களை பயன்படுத்தியுள்ளனர்.

தமிழ் நாட்டில் தமிழ் மொழியை எழுதுவதற்கு வழங்கிய வட்டவடிவ எழுத்து என்பர் கற்களில் வெட்டும் எழுத்தாதலால் இதனை ஆரம்ப காலங்களில் வெட்டெழுத்து எனக் குறிப்பிட்டனர்.

மிகப் பழைய கல்வெட்டுக்களில் உள்ள வட்டெழுத்து தமிழரின் பழைய எழுத்து வடிவம் எனக்குறிப்பிடப்படுகிறது இந்த வட்ட எழுத்துமுறை பாண்டிநாட்டில் அதிகமாக பயன்பாடுத்தபடுகின்றது கி.பி 8ம்,9ம் நூற்றாண்டைச் சார்ந்த பாண்டியர்களின் செப்பேடுகள் அனைத்தும் வட்டெழுத்திலேயே காணப்பட்டது. தமிழில் கி.பி 12ம் நூற்றாண்டு வரை வட்டெழுத்துமுறை சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

தமிழ் நூல்கள் அச்சிடத் தொடங்கிய காலத்திலேயே தான் தமிழ் எழுத்துக்கள் இப்பொழுது காணப்படும் வடிவநிலையினைப் பெற்றன. எனினும் ஒவ்வொரு நூற்றாண்டிலும் வரிவடிவங்கள் சில மற்றங்களுக்குள்ளாகி வளர்ச்சியடைந்து வந்திருந்தது. பண்டைக்காலத்தில் கூட தமிழ் எழுத்தும் வட்டெழுத்தும் கலந்து எழுதப்பட்டது. இன்று தமிழ் எழுத்து வரிவடிவம் இத்தகைய நிலையை அடைவதற்கு வீரமாமுனிவர் முக்கியமானவர். இவர் வரிவடிவத்தில் குற்றங்களில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தினர். அத்துடன் இவரே ஏகாரத்திற்கு கால் இடும் முறையையும் (“ா”)  உயிர் நெடில் அறிகுறியாகிய இவ்அடையாளத்தை முதல்முதலில் தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். எனவே வீரமாமுனிவர் காலத்திலேயே தமிழ் எழுத்துக்களின் வடிவம் மாற்றம் பற்றிய சிந்தனைகள் தோன்றின.

உலகில் உள்ள எல்லா மொழிகளிலும் காலத்திற்கு காலம் அதன் வரிவடிவதிலும், எழுத்துக்களின் எண்ணிக்கயிலும் மாற்றங்கள் ஏற்பன. இது தமிழுக்கும் பொருந்தும் வீரமாமுனிவருக்கு பின்னர் பெரியார் ஈ.வே ராமசாமி அவர்கள் மேற்கொண்ட எழுச்சுத் தீர்த்தம் தமிழ் நாட்டு அரசாங்கத்தினால்  1990 களில் ஏற்றுக்கொள்ளாது . பின்வரும் 15 எழுத்துகளை வடிவத்தில் மாற்றி அமைத்தார் .

பழைய வடிவம்     புதிய வடிவம்

ஐ                                     அய்

ஔ                                 அவ்      ஏற்றுக்கொள்ளவில்லை

 

ணா

னா

றா

ணை

னை

ளை

லை

ணொ

னொ

றொ

றோ

னோ

ணோ

எனவே வாழுகின்ற ஒரு மொழி அச்சு ஊடகங்களின் வளர்ச்சியினாலும் தொழில்நுட்ப சாதனகளின் மாற்றதினாலும் அதன் வடிவத்தில் மாற்றங்கள் ஏற்படுதல் இயல்பு இதன் அடிப்படையிலேயே காலத்துக்கு காலம் தமிழ் மொழியிலும் மாற்றங்கள் ஏற்பட்டு வந்தன .

கி .பி 1-3 சங்ககாலம்

கி .பி 3-6  சங்கமருவிய காலம்

கி .பி 6-9  பல்லவர் காலம்

கி .பி 9-14 சோழர்காலம்

கி .பி 14-18 நாயக்கர் காலம்

கி .பி 18,19 ஐரோப்பியர் காலம்

கி .பி 20,21 தற்காலம்

BA Tamil Notes

Check Also

நவீன உரைநடை ba tamil notes

மேலைநாட்டார் வருகையின் பின்னரான உரைநடை – நவீன உரைநடை

மேலைநாட்டார் வருகையின் பின்னரான உரைநடை / நவீன உரைநடை மேலைநாட்டார் தமிழ்நாட்டுக்குள் வருவதற்கு முன்னர் உரைநடை ஓரளவு வளர்ச்சியடைந்திருப்பினும் நவீன …

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks