தமிழ் சொற்பொருள் மாற்றமும் சொற்றொடர் மாற்றமும்

தமிழ் சொற்பொருள் மாற்றமும் சொற்றொடர் மாற்றமும்

தமிழ் மொழியானது நீண்ட கால வரலாற்றை கொண்டது அதே நேரம் சுயத்துவமான இலக்கியங்களையும் மொழி தொடர்பான சிந்தனைகளையும் கொண்டது . மொழி தொடர்பான சிந்தனைகளை வளர்க்கும் நோக்கிலேயே காலத்துக்கு காலம் இலக்கண நூல்கள் தோன்றியுள்ளன. எவ்வறாயினும் இலக்கண நூல்கள் காலமாற்றத்தையும் இலக்கண கூறுகளின் மாற்றங்களையும் சுட்டி நிற்கின்றன.

ஒரு மொழியில் காலத்திற்கு காலம் மாற்றங்கள் ஏற்பதுவதற்கு பல்வேறு காரணிகள் துண்டுதலாக அமைகின்றன.

ஒரு மொழியில் காலத்திற்கு காலம் மாற்றங்கள் ஏற்படுவதற்கும் பல்வேறு காரணிகள் தூண்டுதலாக அமைகின்றன.

  1. அரசியல் தொடர்பு
  2. சமயத் தொடர்பு
  3. ஏனைய நாடுகளுடன் கொண்டிருகின்ற தொடர்பு
  4. வியாபார தொடர்பு
  5. புதிய இலக்காண நூல்களின் தோற்றம்
  6. சமூக பண்பாட்டு கலப்புகள்
  7. அகரீதியான மாற்றங்கள்
  8. தூயமொழிப்பயன்பாடு
  9. உலகமயமாதல்

என்பன மொழியில் மாற்றங்களை ஏற்பன குறிப்பாக

  1. சொற்பொருள் மாற்றங்கள்
  2. எழுத்து சீர்த்திருத்தங்கள்
  3. எழுத்துகங்களின் நிலையில் ஏற்படுகின்ற மாற்றங்கள்
  4. சொற்றொடர்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள்
  5. தொடர்பாடல் மாற்றங்கள்.

ஆகியன முழுமயான மாற்றங்களுக்கு காரணமாகின்றன. ஏற்கனவே குறிப்பிட்டது போல தமிழின் வரிவடிவத்திற்கு பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டன.குறிப்பாக  பிரமி,வட்டெழுத்து,கிரந்த்தம்,தமிழ் எழுத்து என மாற்றமடைந்து வந்திருப்பதைக் காணலாம்.அச்சியந்திரப் பவனையில் பின்னர் எழுத்துக்களின் வடிவங்கள் பெரு மாற்றங்கள் ஏற்பட்டு வந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது.

மனிதன் வாழ்வோடு பின்னிப்பிணைந்திருப்பது மொழி அது பல நூற்றாண்டுகளைக் கடந்தது. எனவே தான் அதன் மொழி அமைப்பிலும், இலக்கண அமைப்பிலும், சொல்லாட்சியிலும், அர்த்தங்கள் வேறுபடுகின்றன. உதாரணமாக சங்ககால புறநானூற்றில் “கோவில்” என்ற சொல் அரண்மனை  என்ற பொருளைத்தர பல்லவர் காலத்தில் அதே சொல் இறைவனுடைய இருப்பிடம்  என்ற பொருளைத்தருகின்றது. எனவே மொழிவரலற்றிலும்,வளர்சியிலும் எத்தகைய மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை ஆகும். அதாவது ஒரு சொல்லுக்கு தொடக்கத்தில் அமைந்த பொருளே இன்று வரையில் வழங்கவேண்டுமென்ற நியதி இல்லை.

சொல், பொருள் உணர்த்தும் முறையில்  ஏற்படும் மாறுதல்களையே சொற்பொருளியல் என்பர்.சொற்கள் பொதுவாக சூழ்நிலையை ஒட்டி பொருள் உணர்த்துகின்றன. சில இடங்களில் ஒரு பொருளையும் வேறு சில இடங்களில் அப் பொருளோடு தொடர்புடைய இரண்டவது பொருளையும் உணர்த்துகின்றன. சொற்பொருள் பற்றி ஆராய்ந்த மொழியியலாளர்கள் ஒரு சொல்லின் சுழலை அறிந்து கொள்ளாமல் அச்சொல்லின் பொருளை அறிந்து கொள்ள இயலாதென கூறுவர் இதனையே தொல்காப்பியர்,

‘எல்லா சொல்லும் பொருள் குறித்தனவே’

(தொல்.சொல் 155)

எனவே சொற்கள் சூழ்நிலையை நோக்கி பல்வகைப்பட்ட பொருள்நுட்பங்களை புலப்படுத்துகின்றன. ஆதலால் ஒரு சொல் ஓரிடத்தில் வெளிபடைப்பொருளையும் இன்னொரிடத்தில் குறிப்புப் பொருளையும் தரலாம்.சொற்பொருள் மாற்றம் பல்வேறு வகைகளில் நிகழ்கின்றது.

  1. ஒரு சொல்லில் ஒரு பொருள் – உ+ம் போர்

இச்சொல் பழந்தமிழ் வைக்கோல்போரைக் குறித்தது ஆனால் இன்று பெரும் சண்டைகளைக்குறிக்கின்றது. ஆயினும் விவசாய மக்களுடையே  அதே பயன்பாட்டில்  இருந்து வருகின்றது.

  1. ஒரு பொருளுக்கு ஒரு சொல் – உ+ம் வீடு, இல்லம், மனை, அகம்

இவ்வாறு ஒரு சொல் ஒரு பொருளைத் தருவதோடு உள்ளார்ந்தமாக  பார்க்கின்ற போது நுணுக்க வேறுபாடுகளையும் தரும்.

  • உயர் பொருட்பேறு – உ+ம் பிள்ளை

முன்பு இழிந்த பொருளை குறிக்க வந்த சொல் இன்று உயந்த பொருளை குறிக்க பயன்படுகின்றது.அதாவது பிள்ளை என்ற சொல் அணில் பிள்ளையை குறித்து பின்னர் மக்களின் மகவை குறித்து இன்று அதுவே வழக்காகிவிட்டது.

  1. இழிபொருட்பேறு – உ+ம் காமம்

முன்பு உயர்ந்த பொருளில் வழங்கிவந்த சொல் இன்று இழிந்த பொருளில் வழங்கப்படுகின்றது. உ+ம்  காமம்,நாற்றம்,குப்பை,சேரி ஆகிய சொற்கள் பழந்தமிழில் உயர் பொருளில் பயன்படுகின்றது.ஆனால் இன்று அச்சொற்கள் யாவும் இழிபொருளில் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

  1. சிறப்பு பொருட்பேறு

முன்பு பலவற்றிற்கு பொதுவாக பயன்படுத்தப்பட்ட சொல் இன்று அவற்றில் ஒன்றை மட்டும் சிறப்பித்து வருகின்ற சொற்களையே சிறப்புப்பொருட்பேறு என்பர்.உ+மாக நெய், மான், பறையன்,பெண் சாதி ஆகிய சொற்கள் இன்று சிறப்புப் பொருளை  குறிக்க பயன்படுத்தப்படுகின்றது.

  1. போதுப்பொருட்பேறு

முன்பு ஒருவரின் பெயருக்கே வழங்கி வந்த சொற்கள் இன்று அதனோடு ஒத்த பலவற்றிற்கு பொதுப்பெயராக வழங்கிவருவதை அவதானிக்கலாம்.  உ+ம் மரக்கால், குட்டி, எண்ணெய்,தண்ணீர்,திங்கள்

  • நுன்பொருட்பேறு

முதலில் பருப்பொருளை(பெரிய) உணர்த்திவந்த சொல் இன்று நுண்பொருளை உணர்த்தத் தொடக்கிவிட்டது. இது காலமற்றதால் ஏற்பட்டது. நோக்கம் என்ற சொல்லை எடுத்து நோக்குவோமாயின்  அது பழங்காலத்தில் பார்வையை உணர்த்துகின்றது. ஆனால் இன்று  நோக்கம் என்ற சொல் குறிக்கோளை உணர்த்துகின்றது. பருப்பொருட்பேறு, மென் பொருட்பேறு,வன் பொருட்பேறு, மங்கலவழக்கு, இடக்கரிடக்கல், குழூக்குறி, ஆகுபெயர்,உருவப்பெயர்கள் போன்றயாவும் இன்று சொற்பொருள் மாற்றத்தில் முக்கிமானதாக காணப்படுகின்றது.அதாவது சொற்கள் பொருளில் அடையும் மாற்றம் விரிவு,சுருக்கம்,உயர்வு,இழிவு முதலிய நிலைகளில் காலத்துக்கு காலம் மாற்றங்களை ஏற்படுதுகின்றது.

சொல் பழைய பொருள் புதிய பொருள்
அகம் உள் , மனம் கர்வம் , வீடு
அகலம் மார்பு இடத்தின் பரப்பு
இறத்தல் கடத்தல் சாதல்
கட்டில் அரியணை படுக்கும் சாதனம்
கண்ணி மாலை வளை ,வெடிப்பொருள்
கிழவன் உரியவன் முதியவர்
கோடை மேல் காற்று வெயில் காலம்
தஞ்சம் எளிமை அடைக்கலம்

எனவே  சொற்களுக்கு புதுப்பொருள் உண்டவதைப்போல சொற்களை குறிக்க புதுச்சொற்களும் ஆக்கப்படுகின்றன. காலத்துக்கு காலம் சொற்பொருள்களில் மாற்றம் ஏற்ப்பட்டது போல சொற்றொடர்களிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

தொல்காப்பிய சொல்லதிகாரத்தை ஆராய்ந்து நோக்கின் தொடரியல் நுட்பங்களும் கருத்துகளும் உள்ளமை தெரியவரும்.தமிழில் வாக்கிய அமைப்புக்கு எழுவாய்,பயனிலை மிக முக்கியமானவை இவைபற்றி தமிழ் இலக்கண நூல்கள் யாவும் முதன்மைப்படுத்திவந்துள்ளன. எனினும் இன்றைய அறிவிப்பு தமிழ்  நடையில் பல்வேறு புதிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. இதற்கு காரணம் ஆங்கில மொழி செல்வாக்கினூடாக வந்த புதிய சொற்றொடர் அமைப்புகளாகும்.பழந்தமிழ் 30 வகையான சொற்றொடர் அமைப்புக்களை அடையாளப்படுத்துகின்றன. தமிழில் மிகச்சிறிய சொற்றொடர்  எழுவாய்,பயனிலையை எழுவாய்,பயனிலை கொண்டிருக்கும் ஆயினும் அதற்குள் திணை,பால்,எண், இடம் காணப்படுகின்றது .உ +ம்

எழுவாய்       பயனிலை

அவன்              வந்தான்

இன்றைய சொற்றொடர் அமைப்பு பின்வரும் கூறுகளை கொண்டிருக்கும்.

எனவே சொல் தனியே நின்று பொருள் உணர்த்த வல்லதாயினும் சொல்லை அடுத்து வரும் அண்மைச்சொல் அப்பொருளைத் தெளிவாக்கப்பெரிதும் உதவுகின்றது. சொற்றொடர் அமைப்பை பின்வரும் 3 கோட்டுப்படங்களினூடாக விளங்கிக்கொள்ளலாம்.

மேற்குறிப்பிட்ட 3 வகையான சொற்றொடர் அமைப்பை விட சர்வதேச மொழியாகிய ஆங்கில மொழிச் செல்வாக்கு காரணமாகவும் தமிழ் மொழியின் பரந்த தன்மை காரணமாகவும் சொற்றொடர் அமைப்பில் மாற்றங்கள் ஏற்படுகின்றன.நிதர்சனமாக (உண்மை) வாழுகின்ற-வளருகின்ற ஒரு மொழி கால மாற்றங்களையும் உள்வாங்குதல் இயல்பு இதன்   அடிபடையிலேயே தமிழ் மொழியின் சொற்றொடர் அமைப்பு காலத்துக்கு காலம்மாற்றங்களுக்குள்ளாகி வருகின்றது.எனவே தான் சொற்களிலும் சொற்றொடர்களிலும் அதன் அமைப்பு பொருள் ஆகியவற்றில் மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு. சொற்பொருள்மாற்றம் தமிழ் மொழியின் ஆரம்ப நிலையில் இருந்து தெட்டத்தெளிவாக தெரிகின்றது.ஆயினும் சொற்றொடர் அமைப்பில் 19ம் நூற்றாண்டின் பின்பே பெருத்த மாற்றங்களை அவதானிக்கலாம். இதற்கு அடிப்படைக் காரணம்,அச்சியந்திர வருகையும் உரைநடையும் வளர்சியுமாகும்.

BA Tamil Notes

Check Also

BA TAMIL NOTES

தமிழ்மொழி வரலாற்றை ஆராய்வதற்கான அடிப்படைச் சான்றுகள்.

BA TAMIL NOTES தமிழ்மொழி வரலாற்றை ஆராய்வதற்கான அடிப்படைச் சான்றுகள். மொழி வரலாறு என்பது காலத்திற்கு காலம் அல்லது காலந்தோறும் …