அநுராதபுரக் காலத்தில் இந்து மதம்

அநுராதபுரக் காலம் [ கி.மு  600 – கி.பி 1000 ]

தேவநம்பியதீசன் – 05 மகிந்தன்  [1300 ஆண்டுகள்]

“ தேவநம்பிய தீசன் “ என்ற சிங்கள அரசனின் ஆட்சிக் காலம் தொடக்கம்  “ 05 ம் மகிந்தன் “ எனும் அரசனின் ஆட்சிக் காலம் வரை உள்ள 1500 ஆண்டுகள் அநூராதபுரம் இலங்கையில் பரவியதாக விளங்குகிறது. இதுவே அநூராதபுரக் காலம் எனப்படும். தேவநம்பிய தீசன் காலத்தில் இலங்கையில் பௌத்தம் பரவத் தொடங்கியது.  அதற்கு முன்னுள்ள சில நுற்றண்டுகளில் இலங்கையில் நிலவிய சமயம் எது என்பதை ஆராய்ந்தோர். அது இந்து சமயமாகவே இருந்திருக்கும் எனும் முடிவுக்கு வந்தார்கள். இதற்குச் சான்றாக “ வல எல்லு கொடக்கந்தவில் “ கிடைத்த கல்வெட்டில் “ சிவம் சிவ கபம் “ எனும் சொற்கள் காணப்பட்டமை. இதை விட கி.மு 1 ம் நூற்றாண்டிலேயே “ திஷ மகா ராமாவில்” ஆட்சி புரிந்த மன்னன் இந்து சமயத்தில் இருந்து பெளத்த சமயத்திற்கு மறியாதகவும் பேராசிரியர்“ பரண விதாண “ கூறுகிறார். “ யாழ்ப்பாண வைபவ மாலையில் “ இலங்கையின் நான்கு திசைகளிலும் சிவாலயம் அமைக்கப்பட்ட தெனக் கூறப்படுகின்றது.

தேவநம்பிய தீசனுக்கு முன்பிருந்த அரசர்கள் அவர்கள் சிங்களவராயினும் இந்து மதத்தவரானாயினும் பிராமணர்களை ஆதரித்து வந்தமையும் அரச சபைகளிலே பியாமணர் புரோகிதராகவும், ஆலோசகராகவும், வைத்தியராகவும் செல்வாக்குப் பெற்றிருந்தமை இந்து மதச் செல்வாக்கை எடுத்துக்கட்டுகின்றன. கி.மு 101 – கி.மு 77 வரை ஆட்சி செய்த புத்தகாமினி எனும் அரசன் “ ரிதி விகாரைக்கு” விஜயம் செய்த பொழுது புத்தகுருமார்கள் 500 ஐந்நுற்றுவரும், பிராமணர்கள் 1500ஆயிரத்து ஐந்நுற்றுவருடன் சென்றான் என அவ் விகாரையின் பனையோலைச் சுவடியில் காணப்படுகின்றது.

சிங்களக் கவிதை நூலாகிய “ கந்த உபத “ கந்தனின் தோற்றம் எனும் நூலில் கதிர்காமத்தில் எளுந்தருளிய முருகப் பெருமானை துட்டகாமினி சென்று தரிசித்து நேர்த்திக்கடன் செலுத்தியதாக கூறப்படுகின்றது. துட்டகாமினியால் தோக்கடிக்கப்பட்ட எல்லாள மன்னன் இந்து மதத்தவன் என்பதிலிருந்து இந்து மதம் செல்வாக்குப் பெற்றதென்பதை அறிகின்றோம். கி.பி 2 ம் நூற்றாண்டில் “ கஜபாகு மன்னன் “ இந்தியாவின் சேரநாட்டில் இருந்து “ பத்தினி வழிபட்டைக் “ கொணர்ந்து இலங்கையில் அறிமுகம் செய்தான். எவ்வகையில் நோக்கினாலும் இந்து சமயமானது கிறிஸ்து சாகாப்ததிற்கு முன்பதே இலங்கையில் உறுதியாக நிலை பெற்று விட்டது எனலாம். ஆனால் சிங்கள மன்னனான மகாசேனன் ( கி.பி 334 – 392 ) திருக்கோணேச்சரம் உட்பட பல சிவாலயங்களை இடித்து உடைத்து அவ்விடங்களை புத்தவிகாரைகளை எழுப்பி சிலகாலத்துக்கு இந்துப் பண்பாட்டு வளர்ச்சியிலே தளர்ச்சி காணப்பட்டது. உண்மைதான் எனினும் இத்தகை உண்மைகள் இந்து சமய கல்வியும், உண்மையும் உறுதியாக அமைவதற்கு உதவின.

அநூராதபுரத்தில் ஜெத்தவனாராம, விஜயபாகு, விகாரைகளின் அழிபாடுகளிடையே பத்திரகாளி விக்கிரகத்த்தின் பாதி உறுப்பும் (1890) எச்.கீ.வி.வெல் என்ற வரலாற்றாய்வாளர்களினால் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அக் காலத்தில் அங்கு இந்துக் கோயில்கள் இருந்தமையை அறியமுடிகிறது. கி.பி ௦7 ம், ௦8 ம் நூற்றாண்டுகளில் சம்பந்தர், சுந்தரர் போன்றோரால் திருக்கேதீச்சரம், திருக்கோணச்சரம் போன்ற தலங்கள் மீது தேவாரப் பாடல்கள் பாடப்பட்டிருந்தது. இவ் வாலயங்களும் அநூராதபுர காலத்தில் சிறப்புற்றிருந்தன என்பதை அறியலாம்.

அநூராதபுரக் காலத்தில் பௌத்த மதப் பரம்பளால் பல இந்துச் சிற்றரசர்கள் இந்து மதத்தைக் கைவிட்டது போலவே பெளத்த மன்னர்களும் இந்துக்களாய் மாறியமை தெரிய வருகிறது. கி.பி 831 – 851 காலப்குதியில் “ ௦1 ம் சேனன் “ என்ற சிங்கள பெளத்த அரசன் இந்துத்துறவி ஒருவரால் இந்து மதத்திற்கு மற்றப்பட்டான். என்ற செய்தி “ நிகாய சங்கிரகம் “ என்ற சிங்கள நூல் மூலம் தெரிய வருகின்றது.

அநூராதபுரக் காலத்தில் சிங்கள தமிழ் மக்களால் பரவலாக இந்து சமயம் கடைப்பிடிக்கப்பட்டு வந்ததென்பதை பெளத்த சமய வருகையால் இந்து சமயம் ஓரளவு பின்தள்ளப்பட்டதாயினும் சிங்கள மன்னர்களின் சிலர் அதனை ஆதரித்தது வந்தனர் என்பது சிவம், சிவகூடம், சிவன், மூத்த சிவன் என்ற பெயர்கள் அநூராதபுர கால கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளமை அக்காலத்தில் சிவ வழிபாடு முக்கியம் பெற்றுள்ளதை எடுத்துக் கூறுகிறது. முருகன், விநாயகர், விஷ்ணு, பத்தினி, கொற்றவை வழிபாடுகளும் இக்காலத்தில் செல்வாக்குப் பெற்றிருந்தன. திருமூலர் தமது திருமந்திரம் எனும் நூலில் இலங்கையை சிவபூமி எனக் குறிப்பிடுவதிலிருந்து அநூராதபுர காலத்திலும் அதற்கு முன்பும் ஈழத்தில் இந்து மதச் செல்வாக்கும் இந்து நாகரிகச் செல்வாக்கும் சிறப்புற்றிருந்தமை அறியக் கூடியதாக உள்ளது.