ஈழ நாட்டுக் குறம் – ப.கு.சரவணபவன்

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான, கவிஞர் ப.கு.சரவணபவனின் “ஈழ நாட்டுக் குறம்”

ஆசிரியர் : ப.கு.சரவணபவன்

ஈழ நாட்டுக் குறம், கவிஞர் ப. கு. சரவணபவன் இலங்கையின் சப்த தீவுகளில் ஒன்றான நயினாதீவு பிறந்து வளர்ந்தவர். இவரது தந்தையார் பெயர் பரமலிங்கம். அங்குள்ள  தில்லையம்பலம் வித்தியாசாலையில் (தற்போதைய நாகபூசணி
வித்தியாலயம்) கல்வி கற்று பின்னர் எஸ். எஸ். சி. பரீட்சையில் பெற்றவர். சிறிய வயதில் கடுiமான நோயினால் பீடிக்கப்பட்ட இவரை ஊரிலுள்ள முருகன்  ஆலயத்தில் கொண்டு போய் இறைவனிடம் மன்றாடிய போது எதிர்பாராத விதமாக இவரது நோய் குணமாயிற்று. அன்றிலிருந்து இவரை குழந்தைவேலு எனச்  செல்லமாக அழைத்தனர்.

இவரது பேரனார் முத்துக்குமார் ஆவர். சரவணபவன் தனது பெயரின் முன்னால் குழந்தை வேலுவையும் சேர்த்துக் கொண்டார். தன்னை பாரதி அடியான் என அழைத்துக் கொண்டவர். மனோன்மணி ஆசிரியை  மணம்புரிந்து மூன்று ஆண் மக்களுக்குத் தந்தையானவர். இவ்வுலகில் நாற்பதே ஆண்டுகள் மட்டும் வாழ்ந்து தமிழ்ப் பணி புரிந்த இவர் நயினை நாகாம்பிகை பதிகம், ஈழ நாட்டுக் குறம், ஈழ மாதா திருப்பள்ளியெழுச்சி, பாரதீயம், காந்தீயம் முதலான கவிதைகளுடன், தனிப் பாடல்கள் பலவற்றையும் இயற்றியுள்ளார். அந்தக் காலத்தில், புகைப்படம் எடுத்தால் ஆயுள்; குறையும் என்று கூறப்பட்ட சம்பிரதாயத்தைப் பின்பற்றித் தன்னைப் புகைப்படம் எடுப்பதில் விருப்பம் காட்டாதவர் எனக் கூறப்படுகிறது.

1951இல் நயினாதீவு சனசமூக நிலைய  வெளியீடாக இவரது கவிதைகள் அடக்கிய “எடுத்த முத்துக்கள்” சிறுநூல் வெளிவந்தது. நீண்ட காலம் வாழ்ந்திருப்பின் சரவணபவனிடமிருந்து உயிரோட்டமுள்ள பல கவிதைகளைத் தமிழுலகம் பெற்றிருக்கக் கூடும். இங்கு  இவரது “ஈழ நாட்டுக் குறம்” என்னும் தேசப் பற்றை எடுத்துக் காட்டும் நான்கு அடிகள் கொண்ட ஏழு பாடல்கள் அமைந்த கவிதை இடம் பெற்றுள்ளது.

இலக்கியம் பற்றிய அறிமுகம்.

குறம் என்பது ஒருவகை இலக்கிய வடிவம். இதில் குறவர்கள் தங்கள் நாட்டுவளம், மலைவளம் முதலானவற்றைச் சிறப்பித்துப் பாடுவதான பகுதிகள் அமையப்பெறும். அதே பாங்கில் இலங்கை நாட்டின் வளத்தைச் சிறப்பித்துப் பாடுவதாய் அமைபவை இப்பாடல்கள்.

Download Complete Guide in Tamil – PDF

1 thought on “ஈழ நாட்டுக் குறம் – ப.கு.சரவணபவன்”

Comments are closed.

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks