காணாபத்தியம்

காணாபத்தியம்

ஓம் என்ற பிரணவப் பொருளின் உருவமாயுள்ள கணபதியை முழுமுதற் கடவுளாக வழிபடுபவர்களை காணாபத்தியர்கள் என்பர். அறுவகைச்சமயங்களுள் முதன்மையானதாக காணாபத்தியம் விளங்குகின்றது.

காணாபத்தியம் தோற்றமும் வளர்ச்சியும்

காணாபத்தியம் பற்றிய தோற்றம் பற்றிய சிந்தனைகள் வேத உபநிடதங்களிலும், ஆகமங்களிலும் சிறப்பாக காணபடுகின்றன. இதிகாச புராணங்களிலே வினாயகரைப் பற்றிய சிறப்பான கருத்துக்கள் காணபடுகின்றன. இருக்கு வேதத்திலே கணபதி உருத்திர கணங்களுள் ஒன்றாக வைத்து வழிபடப்பட்டுருகிறார்.சுப்ரபேத ஆகமத்திலே கணபதி கோமத்திற்கு முதன்மையளிக்படுகின்றது. மகாபாரதத்திலே பஞ்ச பாண்டவர்கள் சூக்த முனிவரின் வேண்டுகோளுக்கிணங்க விநாயகாசதுர்த்தி விரதம் அனுஸ்டிக்கப்பட்டதாக கூறப்படுகின்றது.சிவபுராணம் கந்தபுராணம் போன்றவற்றிலே சிவனதும் உமையினதும் பிள்ளையாகவும் முருகனது அண்ணனாகவும் குறிப்பிடுகின்றார்.

குப்தர் காலத்திலே இலக்கியங்கள் மூலமாகவும் தொல்பொருட் சின்னங்கள் மூலமாகவும் கணபதி வழிபாடு நிலவியுள்ளதாக அறிய முடிகின்றது. கி.பி 6ம் நூற்றாண்டில் தக்கின தேசத்தில் சப்தமாதாகளுடன் வினாயகரின் படிமங்கள் அமைக்கபட்டன.திருச்சிராப்பள்ளி குகைக்கோயிலில் சண்மத விக்கிரகங்களுடன் வினாயகரடைய விக்கிரகங்கமும் இடம்பெற்றிருந்தது. கி.பி 8ம் நூற்றாண்டில் வாழ்ந்த சங்கரரால் இந்து சமயமானது அறுவகைச் சமயங்களாக பிரிக்கப்பட்ட போது அவற்றுள் காணாபத்திய நெறி முதன்மைபடுத்தப்படுகின்றது.

தென்னிந்தியாவை நோக்கும் போது பல்லவர் காலத்தில் தேவாரப்பாடல்களில் கணபதீச்சரம் பற்றிய பாடல்கள் காணப்படுகின்றன. நந்திகலம்பகம் என்ற நூலிலே “கரியின்முகவனை அரியின் மருகனை உருகி நினைப்பவர் பெருமை பெறுவீரே” எனக் கூறப்பட்டுள்ளது. சோழர் காலத்தில் கணபதி வழிபாடு சிறப்புற்றிருந்தமைக்கு நம்பியாண்டார் நம்பியின் வரலாறு ஓர் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இந்தியாவில் தோற்றம் பெற்ற காணாபத்தியம் திபேத்து, பர்மா(மியன்மார்), இலங்கை,யப்பான்,கனடா,சீனா,அவுஸ்ரேலியா முதலிய நாடுகளிலும் பரவி வளர்ச்சியடைந்துள்ளது.சமணரும் பௌத்தரும் கணபதியை வழிபடுகின்றனர். இந்தியாவில் சிறப்பாக மகராஷ்டிரா மக்கள் பெருவிழா எடுத்து வழிபடுவதை இன்றும் காணலாம்.

பிரமாண நூல்கள்

கணபதி உபநிடதம், கேரம்ப உபநிடதம், சுப்ரபேத ஆகமம் , வினாயகர் கவசம், வினாயகர் அகவல், கணேச பஞ்சரத்தினம், கணேச புராணம்,முத்கலபுராணம்,மகா நிர்வாண தந்திரம், வெற்றி வேட்கை, பிள்ளையார் கதை, முத்தவினாயகர் திருவிரட்டை மணிமாலை முதலிய நூல்கள் பிரமாண நூல்களாக கொள்ளப்படுகின்றன.

பிரதிமாலக்க்ஷணங்கள்

வினாயகர் அமர்ந்த நின்ற நடனமாடும் நிலைகளில் காணப்படுபவர்.வினாயகரின் உருவம் மிகவும் வித்தியாசமானது. யானைமுகம்,மனிதஉடல்,பூதகணத்தினுடைய கால்கள்,தொந்திவயிறு,குள்ளஉருவம் என்பவைஇவரை அனைவராலும் அடையாளம் காணச் செய்வதாகும்.

கணபதி ஐந்து கரங்களை உடையவர்.ஒரு கையில் பாசமும், ஒரு கையில் அங்குசமும், ஒரு கையில் மோதகமும், மற்றைய கையில் எழுத்தாணியும், ஐந்தாவது கையான துதிக்கை அமுதகலசம் ஏந்தியதாகவும் காணப்படுகின்றது. அத்தோடு ஒற்றைக்கொம்பு ஆண்யானையினதும், ஒடித்த கொம்பு பெண் யானையினதுமாகக் காட்சியளிக்கின்றார்.

இவருக்கு அருகாமையிலே இவரது வாகனமாகிய பெருச்சாளி காணப்படுகின்றது. பாம்புகள் முப்புரி நூலாகவும் விளங்க,உதடுகள் தொங்கும்நிலையினதாகவும் காணபடுகின்றது.

கரண்ட மகுடம் தலையினையும் பலவகை ஆபரணங்கள் உடலினையும் அழகு செய்கின்றன.வினாயகரது உருவத்திலே வலம்புரி இடம்புரி என இரண்டு விதம் உண்டு.துதிக்கை வலப்புறமாக திரும்பியிருந்தால் வலம்புரி வினாயகர் என்றும் இடம்புறமாக திரும்பியிருந்தால் இடம்புரி வினாயகர் எனவும் அழைக்கபடுகின்றார்.

வினாயகரது வடிவங்கள் சுமார் 51 ஆகும்.அவற்றுள் முதல் பதினாறும் முக்கியமானவை. இவைகோடஜகணபதி எனப்படும். இன்னும் வினாயகர் கணபதி, விக்னேஷ்வரன், வக்ரதுண்டர், லம்போதரன்,ஐங்கரன் முதலிய பெயர்களாலும் அழைக்கப்படுகின்றார்.

காணாபத்தியம் வழிபாட்டு முறைகள்

வினாயகரை கணபதி, வக்ரதுண்டன், ஐங்கரன், லம்போதரன், விக்னேஷ்வரன் எனப் பல பெயர்களை கூறிவழிபடுபவர். வினாயகருக்குகுரிய வழிபாட்டுமுறைகள் மிகவும் எளிமையானவை.அவை ஆகமத்திற்குட்பட்டவை, ஆகமம் சாராதவை என இருவகைப்படும் ஆகமமுறைக்குட்பட்ட ஆலயங்களில் கணபதி கோமம்,நிவேதனம் கணபதி காயத்திரி மந்திரம் என்பவற்றாலும் ,கும்பாபிசேகம், சங்காபிசேகம் என்பவற்றின் போதும் பூஜை நிகழ்த்தப்படும்.’ஓங்கார ரூபாய நம’ என்பது கணபதிக்கு வணக்கம் செலுத்தும் மந்திரமாகும்.

ஆகமத்திற்கு முரணான ஆலயங்களில் இவரை மஞ்சள் சாணம் மா என்பவற்றில் பிடித்து வைத்து பொங்கல் படைத்து பூஜை செய்வர். கணபதி ஆற்றங்கரையிலும் குளக்கரையிலும் வீற்றிருந்து அருள்புரிவார்.மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் பிள்ளையாரை மஞ்சளில் அல்லது சாணத்தில் பிடித்து வைத்து பூசணிப்பூ வைத்து வழிபடுவர். வழிபடுகின்றபோது மும்முறை கைகளை நேராக நெற்றியின் இருமருங்கிலும் குட்டியும் ,கைகளை மாற்றி செவிகளைப் பிடித்து தோப்புகரணம் இட்டும் வழிபாடு செய்வர். வினாயகர் சதுர்த்தி, வினாயகர் சஸ்டி, சுக்கிர வாரம் போன்ற விரதம்களை அனுஷ்டித்தும் மக்கள் வழிபடுகின்றனர்.

கணபதி பூஜையில் அருகம்புல் 21,புஸ்பம் 21,அதிரசம் 21,மோதகம் 21,பழம் 21 எனஇருபத்தியொரு பொருட்களாக வைத்து வழிபாடு செய்வர் .வெண்பொங்கல், அவல், அரிசி, கரும்பு, வில்வம், வாழைபழம், தேங்காய், கொழுக்கட்டை, மோதகம், சுண்டல், வடை, அப்பம், எள்ளுருண்டை, பாயாசம் என்பவற்றுடன் கொய்யாபழம், விழாம்பலம், நாவற்பழம், பிரப்பம் பழம், வெற்றிலை பாக்கு முதலிய அவருக்கு உவப்பான பொருட்களை வைத்தும் வழிபடுகின்றனர்.

தத்துவங்கள்

இந்துக்கள் எதனை எழுதும் போதும் பிள்ளையார் சுழி இட்டே எழுதத் தொடங்குவது வழக்கம். இப் பிள்ளையார்சுழி (உ) ஓம் என்னும் ஓங்காரத்தின் சுருங்கியவடிவமாகும். கணபதியின் துதிக்கை ஓங்காரத்தையே குறித்து நிற்கின்றது.

கணேசர் ஐந்தொழில்களையும் செய்வதாக அறிஞர்கள் கூறுவர்.இவரது எழுத்தாணி பிடித்தகரம் படைத்தலையும் ,மோதகம் ஏந்தியகரம் காத்தலையும், அங்குசம் கொண்ட கை அழித்தலையும், பாசம்கொண்ட கை மறைத்தலையும், அமுதகலசம் ஏந்தியகை அருளலையும் குறித்து நிற்கிறது.

அனைத்து தெய்வங்களினதும் கூட்டு அமைப்பே கணபதி என்று சங்கரர் கூறுகின்றார். கணபதியின் உருவ அமைப்பில் அனைத்து தெய்வங்களும் மந்திர ஒளி ரூபமாக இணைந்துள்ளன. கணபதியின் நாபி(வயிற்றுச்சுழி) பிரம்மரூபம் ,முகல் தருமால் வடிவம், கண் சிவவடிவம்,இடப்பாகம் சக்திரூபம் ,வலப்பாகம் சூரிய வடிவம் எனச் சங்கரர் கூறுகின்றார்.

வினாயகர் தேவஉடல் பெற்றிருப்பதால் உயர்திணையாகவும் மிருகமுகம் கொண்டிருப்பாதல் அஃறிணையாகவும் அதிசய தோற்றமளிக்கின்றார். ஆகவே உபநிடத மகாவாக்கியமான ‘தத்துவமசி’ என்பதன் வடிவமே மகாகணபதி எனலாம்.

வினாயகரின் பெருவயிறு பிரபஞ்சம் முழுவதையும் தம்முள் அடக்கியவர் எனப் பொருள்படும்.வினாயகருக்கு விருப்பமான மோதகம் அவர் எல்லாருக்கும் இன்பமயமக இருக்கிறார் என்ற ஞானதத்துவத்தையே காட்டுகின்றது,அவருடைய வாகனமாகிய பெருச்சாளி நமக்குள்ளிருந்து நம்மையே அழிக்கும் கள்ளதன்மையான உலகப்பற்றுக்களை குறித்து நிற்கின்றது.இவ்வாறு பல தத்துவங்களை வினாயகரது திருவுருவம் குறித்து நிற்கின்றது.

இந்து சமய தொடர்பு

இந்துசமயத்தில் வினாயகர் சிவனுக்கும் பார்வதிக்கும் பிறந்த மூத்த பிள்ளையாக காணப்படுகின்றார்.ஆலயமாகினும் வீட்டு கிரியைகளானாலும் வினாயருக்கே முதல் வணக்கம் செலுத்தப்படும் .இந்துசமயக் கோயில்களிலே வினாயகருக்கு பூஜை செய்த பின்னரே ஏனைய பூஜைகள் இடம்பெறும். எந்தக் கோவிலானாலும் வினாயகருக்கும் ஒரு சிறு கோவில் உள்ளமைகபட்டிருக்கும்.

இந்துக்கள் வீடுகளில் எந்த காரியத்தையும் செய்ய தொடங்கு முன்னர் சாணத்தினால் பிள்ளையார் பிடித்து அதில்அருகம்புல் செருகி வினாயகரை வழிபடுவார்கள். திருமண நிகழ்வுகளின்போது அரைத்த மஞ்சளால் வினாயகர் பிடித்து வைத்து வழிபாடு செய்வர். மக்கள் வினாயகருக்குரிய சிறப்பான விரதங்களான வினாயகர் சதுர்த்தி, வினாயகர் சஸ்டி, சுக்கிரவாரம் முதலிய விரதங்களையும் அனுஷ்டித்து அருள்பெறுகின்றனர்.

இந்துக்கள் எதனை எழுததொடங்கும் முன்னும் பிள்ளையார் சுழி இட்டே எழுதுவர். நூலாசிரியர்களும் மற்றும் புலவர்களும் இலக்கியங்களை இயற்றும்போது காப்புச் செய்யுளில் வினாயகருக்கு வணக்கம் செலுத்திய பின்னரே இலக்கியங்கள் இயற்றுவர்.

Wikipedia

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks