வேதாந்தம்
வேதாந்தம் எனும் போது வேதம் + அந்தம் என பிரிந்து வேதத்தின் இறுதி பொருள்படும். அதாவது வேத வரிசையில் காலத்தால் பிற்பட்டதே வேதாந்தம் இதை விட அந்தம் என்ற சொல்லை சாரம் அல்லது உட்பொருள் என்ற பொருளில் வேதத்தின் சாரம் வேதாந்தம் என பொருள்படும். வேத உபநிடதம் கூறுபனவற்றை எல்லோராலும் விளங்கி கொள்ள முடிவதில்லை இவற்றை மக்கள் விளங்கி கொள்ளத்தக்கவாறு வேத உபநிடத கருத்துக்கள் தொகுத்து விளக்கமாக கூற அறிஞர்கள் முற்பட்டனர். இந்த வகையில் இக் காரியத்தில் ஈடுபட்ட முதல் பெருமை பாதராயனர் என்பவருக்கு கூறலாம். இவரை வியாசர் எனக் கூறுவதும் உண்டு. இவரே வேதாந்தம் என்ற சொல்லை முதன் முதலில் உபயோகித்தவர். அவர் ஆக்கிய நூலின் பெயர் வேதாந்த சூத்திரம் எனப்படும். பிரம்ம சூத்திரம் எனப்படுவதும் இதுவே. இதுவே வேதாந்த கருத்துக்கு பிரம்மம், ஆன்மா, உலகம் பற்றிய விடயங்கள் ஆராயப்பட்டன. இதை விட வீடு பேறு, வீடு பேறு அடைவதற்கான வழி, கன்மம், மறுபிறப்பு போன்ற விடயங்களும் ஆராயப்படுகிறது.
பாதராயணரின் வேதாந்த சூத்திரம் நினைத்தவாறு மக்களை சென்றடையவில்லை இதற்கு காரணம் அந் நூல் சூத்திரவடிவிலும் கருத்துகளை சுருக்கமாக கூறியதுமே ஆகும். இதனால் அறிஞர்கள் ஒவ்வொறுவரும் தம் அறிவுக்கு எட்டியவாறு வேதாந்த சூத்திரத்திற்கு விளக்கம் எழுத முதற்பட்டனர். இவ் விளக்கம் பாசியம் (பாடியம்) எனப்பட்டது. அதாவது பிரம்ம சூத்திரத்திற்க்கான உரையாகும் இவ்வாறு உரை எழுதியோராக சங்கரர், இராமானுஜர், மத்துவர் போன்றோர் முக்கியமானவர்கள். இவர்களது வேதாந்த விளக்கங்கள் முறையே
- அத்வைதம்
- விசிட்டாத்வைதம்
- துவைதம் எனப்படும்.