அத்வைதம் | சங்கரர் வேதாந்தம்

அத்வைதம் / சங்கரர் வேதாந்தம்

பிரம்ம சூத்திரத்திற்கு ஆதி சங்கரர் எழுதிய விளக்க உரையே அத்வைதக் கோட்பாடாகும். அத்வைதம் என்பதன் பொருள் “ இரண்டல்ல ஒன்று என்பதாகும் ”:

அத்வைதம் =  அ + துவைதம் என இச் சொல் பிரிக்கப்படும்.

துவைதம் = இரண்டு

அ = அல்ல என்பதாகும்.

ஃ இரண்டல்ல ஒன்று என்பது இதன் பொருளாகும்.

அதாவது உள் பொருள் இரண்டல்ல ஒன்று என்பதே அவருடைய வாதமாகும். இவரது அத்வைத கோட்பாட்டை சுருக்கமாக பின்வருமாறு கூறலாம். “ பிரம்மம் உண்மையான பொருள் இந்த உலகம் ஒரு தோற்றமே ஒவ்வொரு ஆன்மாவும் பிரம்மம்தான் வேறொன்றும் இல்லை “

அத்வைதம் பின்வரும் உண்மைகளை கூறுகின்றது.

  • பிரம்மத்தின் இருமையற்ற நிலை
  • உலகத்தின் உண்மையற்ற நிலை
  • பிரம்மத்தில் இருந்து ஆன்மா வேறுபடா நிலை என்பவையாகும்.

எந்தவொரு மதத்தினதும் அடிப்படைத் தத்துவத்தினை புரிந்து கொள்ள கடவுள், உயிர், உலகம் என்ற ௦3 பொருள் பற்றி என்ன சொல்கிறது என்பதை தெரிந்து கொள்வது சுலபமான வழி, இந்த வகையில் சங்கரர் இம் மூன்று பொருட்களை பற்றியும் என்ன சொல்கிறார் எனக் கவனித்தால் அவரது தத்துவத்தை இலகுவில் விளங்கி கொள்ளலாம். இம் மூன்று பொருளிலும் உலகம், உயிர் என்பவற்றை மாயைத் தோற்றமாகவும் முழுமுதல் பொருளின் பகுதிகளாகவும் எடுத்துக்காட்டி உள் பொருளாகிய பிரம்மம் மட்டும்தான் உண்மை என்றும் அது இரண்டல்ல  ஒன்று என சங்கரர் விளக்குகிறார்.

உலகத்தை ஒரு மாயைத் தோற்றம் எனக் குறிப்பிடும் சங்கரர் அதற்கு தமது ஆசிரியராகிய கௌடபாதரது கருத்தை பின்பற்றினார் உலக தோற்றம் பற்றி சங்கரர் முன் வைக்கும் வாதம் விபர்த்தவாதம் ஆகும்.  விபர்த்தவாதமனது காரணத்தை உண்மை என்றும் காரியத்தை பொய் எனவும் கொள்கின்ற ஒன்றாகும். இங்கு சங்கரர் உலக தோற்றத்திற்கு காரணமான பிரம்மத்தை உண்மை என்றும் அதனால் தோற்றிவைக்கப்பட்ட காரியமாகிய உலகத்தை பொய் என்றும் கூறுகின்றார். உலகம் மாயை தோற்றம் என்று குறிப்பிடும் சங்கரர் அதனை விளக்குவதற்கு காயிறு பாம்பாக தெரிதல் எனும் உவமானத்தை பயன்படுத்துகிறார். சில வேளை எமது பார்வைக்கு தூரத்தில் இருக்கும் கயிறு பாம்பாகத் தோற்றமளிக்கும். இவ்வாறே பிரம்மமும் உலகமாக தோற்றமளிகின்றது. எப்படி அங்கு பாம்பு இல்லையோ அவ்வாறே உலகம் என்பது இல்லை என்பது சங்கரரது வாதமாகும்.

அடுத்து ஆன்மாவுக்குரித்தான கனவு, நனவு, துரிதம் என்ற மூன்று நிலைகளுகிடையிலான\ தொடர்பினை கொண்டு உலகம் ஒரு மாயை தோற்றமென சங்கரர் காட்டுகிறார். கனவு நிலையில் ஆன்மா இருக்கும் போது அதனை உண்மை எனக் கொள்கிறது. நனவு நிலைக்கு வரும் போதுதான் கனவு நிலை பொய் என புலனாகிறது. நனவு நிலையை கடந்த துரித நிலைக்கு வரும் போது நனவுலகம் பொய்யாகும். இதன் முலம் சங்கரர் உலகம் மாயைத்தோற்றம் என சங்கரர் விளக்குகிறார்.

ஆன்மா

உயிர்களையும்(ஆன்மா) ஒரே பொருளான பிரம்மத்தின் பகுதிகளே அன்றி உண்மையுள்ளவை. அல்ல ஓர் ஆன்மா மட்டுமே உண்மை என வாதிப்பதில் சங்கரர் வேதாந்தத்திற்கு ஏகாண்மை வாதம் எனவும் ஒரு பெயரும் உண்டு அந்த ஆன்மா பரமான்மா எனவும் அழைப்பர். இதனை விளக்குவதற்கு சங்கரர் முன்வைக்கும் வாதங்களுள் ஒன்று

  1.  பிரதிவிம்பவாதம்
  2.  அவச்சேதவாதம்

பிரதிவிம்பவாதம்

பிரதிவிம்பவாதம் என்பது ஒரு பொருளிற்கு பல விம்பங்கள் தோன்றுவதை வைத்து விளக்கும் வாதமாகும். விம்பங்கள் அனைத்தும் உண்மையில் இல்லை அவை வெறும் தோற்றமே உலகிற்கு சந்திரர் உண்டு ஆனால் உலகில் கடல், ஆறு, குளம்,குட்டை, கிணறு போன்ற பல நீர் நிலைகள் காணப்படுகின்றன இவற்றில் எல்லாம் ஒரே சந்திரனது பல விம்பங்கள் தோன்றுகின்றன,. இவ்வாறே பரமாத்மா ஒன்றாக எண்ணற்ற உயிர்கள் ஜீவாத்மாக்களாக தோற்றம் அளிக்கின்றன என சங்கரர் விளக்குகின்றார்.

அவச்சேதவாதம்

இவர் கூறும் .அவச்சேத வாதத்தைப் பார்க்கின்ற போது உலகமெங்கும் வியாபித்திருப்பது ஒரே வொளிதான் ஆயினும் இவ்வொளி உலகிலுள்ளே எத்தனையோ அடைப்புகளாலும் தடுப்புளாலும் தனித்தனி கூறுகளாகவும் பிரித்திருக்கின்றது ஓர் அறையை நிரப்பும் வெளி அறையின் வடிவத்திற்கு ஏற்ப நிரப்பி நிற்கும்.  வெளி அவற்றின் வடிவங்களுக்கு ஏற்பவும் பிரிந்தும் தனித்தும் நிற்கிறது. இவை தற்காலிகமான தடுப்பினால் வெவ்வேறாக்கப்படுகிறது. இதைப் போன்றுதான் ஒரே பிரம்மம் பந்திக்கப்பட்டு பல ஆண்டுகளாக காணப்படுகின்றது என்பது சங்கரர் வாதமாகும்.

இதுவரை பிரம்மமே உலகமாகக் தோற்றமளிகின்றது என்றும் பிரம்மமே உயிர்களாக தோற்றமளிக்கிறது. என்பதை அறிவோம் ஆனால் பிரம்மம் உயிர்களாவதற்கும். பிரம்மம் உலகமாவதற்கும் வேற்றுமைகள் உண்டு. இதனை ஓர் உவமை முலம் சங்கரர் விளக்குகிறார். கயிறு பாம்பாக தெரிதலில் பாம்பு என்பது உண்மை இல்லாத ஒன்றாகிறது. அதாவது உலகம் உண்மையில்லாததாகிறது. ஆனால் பிரம்மம் ஆன்மக்களாக தோற்றமளிப்பதை வெள்ளை மலர் ஒன்றை சிவப்பு கண்ணடியில் பார்ப்பது போன்றது என சங்கரர் கூறுகின்றார். இங்கு மலர் என்பது உள்ள பொருளாகிறது என்றும் ஆனது குணதிசயமே மாறுபட்டு காணப்படுகிறது என்று கூறுகிறார். இவாறமையும் சங்கரரது தத்துவத்திற்கு அடிப்படையாக அமைவது மாயவாதமாகும். மாயையினை கொண்டே உலக உயிர்கள் தோற்றம் என சங்கரர் கூறுகிறார்.

சங்கரர் கூறும் மாயை

மாயை என்பதற்கு “அநிர்வசனியம்” பொருள் என்பார் சங்கரர் இங்கு வசனிபம் என்பது உள்ளது என்றும் நிர்வசனிபம் என்பது இல்லாததென்றும் பொருள்படும். அ என்பது அல்ல என்ற பொருள் படுவதனால் அநிர்வசியம் என்பது உள்ளதும் அல்ல இல்லாததும் அல்ல என்று பொருள்படும்.

மாயையே உலகம், உயிர்கள் முதலியவைகள் உள்ளது எனக் காட்டுவதனால் அது உள்பொருளாகிறது. ஆன்மா தண்னைத்தான் உணரும் போது மாயை அழிவதனால் அது இல்லாத பொருள் ஆகின்றது. இத்தகைய மாயை எங்கிருகின்றது எனும் கேள்வி பிறக்கும் போது சங்கரர் பிரம்மத்தின் இரு நிலைகள் பற்றி குறிப்பிடுகின்றார்.

  1. பூரண நிலையான பிரம்மம் – நிர்க்குண பிரம்மம்
  2. மாயை உடன் கூடிய குறைபாடான பிரம்மம் –சற்குண பிரம்மம்

குறைபாடான ஈஸ்வரனுடன் கூடியதில் தான் மாயை அமைகிறது. என விளக்குகிறார் வீடு பேறு அடைவதற்கு ஞானமே முக்கிய வழி என்பது சங்கரர் கொள்கை அஞ்ஞானம் அல்லது அவித்தையே உலகின் துன்பங்களுக்கு காரணம் ஞானத்தால் அவித்தையை அகற்றலாம் அவ்வாறன நிலையில் பிரம்மமும் சிவனும் பேதமற்றது என்பது சங்கரர்கொள்கையாகும்.

சங்கரர் வேதாந்தத்தில் உள்ள குறைபாடு.

உலகம் ஒரு தோற்றம் என்பதை விளக்கக் கையாளும் உவமை கயிறு பாம்பாகத் தோன்றுகின்றதோ அதுபோலவே பிரம்மமும் உலகமாகத் தோன்றுகிறது. இந்த உவமையில் கயிறு, பாம்பு, காண்பவன் ஆகிய முன்று அம்சங்கள் இருக்கின்றன. கயிற்றைப் பாம்பாகப் பார்ப்பதற்கு ஒருவனும் உளான் அவனால் சங்கரர் கூறும் பிரம்மமே உலகத் தோற்றம் பெறுவது யாருக்காக என்பது கேள்வி இவரது கருத்துப்படி ஆன்மாக்களும் பிரம்மமே எனவே பிரம்மாத்துக்கே பிரம்மம் உலகமாகத் தோன்றுவது விசித்திரமானது.

மேலும் பாம்பு கயிறாகத் தோற்றும் உவமையிலேயே கயிற்றைப் போலவே பாம்பும் ஒரு உள்பொருள் அதுஅவ்விடத்தில் இல்லையாயினும் பாம்பு என்ற ஒன்று இருந்தபடியால்தான் கயிற்றை கண்டதும் அந்த நினைவு வருகின்றது. ஆகவே உலகமும் உள் பொருளாய் இருக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகின்றது போது சங்கரர் தத்துவம் பிழையாகிறது.

எனவே இவரது மாயைக் கோட்பாடு விளங்கப் படுத்த முடியாத ஒன்றாக கணப்படுவதனால் தான் இராமானுஜரது விசிட்டாத்துனவதம் தோற்றம் பெற்றது என்பதனை அறிகிறோம்.

சங்கரர்  தமது அதி கூர்மையான மதிநுட்பத்தினாலும் ஆச்சார  நடைமுறைகளாலும் மாபெரும் மதமொன்றை ஸ்தாபித்த சங்கரர் வாழ்கை வரலாறு எவரையும் பிரமிக்க செய்ய வல்லன. இவர் தென்இந்தியாவிலுள்ள தற்போதைய மாநிலத்தின் காலடி எனும் ஊரில் அவதரித்தார். இவரது வாழ்க்கைக் காலம் கி.பி 788 – 820 வரையாகும். இவர் வாழ்ந்ததும் ஆக 32 ஆண்டுகள் தான் இக் குறுகிய கால எல்லையுள் இவர் இயற்றிய நூல்களும் சாதித்த சாதனைகளும் நிகரற்றவை தத்துவ ஞான உலகிலே இவருக்கு நிகராக குறிபிடத்தக்கவர் வேறு எவரும் இலர் என்பது அறிஞர்கள் கருத்தாகும்.

எத்தனையோ நுற்றண்டுகள் ஓடிய போதிலும் இவர் ஆற்றிய அத்வைதக் கோட்பாடு மங்காப் பொலிவுடன் நிற்கிறது. மேல் நாட்டு அறிஞர்களுடைய சிந்தனையைக் கவர்ந்து அவர்களது ஆழ்ந்த ஆராய்ச்சிக்கும் சர்ச்சைக்கும் ஈடுகொடுத்து வருகிறது இந்தியதேசமெங்கும் கால்நடையாக யாத்திரை செய்து பல அறிஞர்களோடு வாதங்களில் ஈடுபட்டு இவர் தனது கருத்துகளை நிறுவினர். தங்களுள் பிரச்சனைப்பட்டுக் கொண்ட வைதீக சமயத்தாரை ஒற்றுமைப்படுத்தி சன்மதங்களை மீள நிறுவியமை சங்கரரது திறமை ஆகும். இவர் கணகதாரா ஸ்தோத்திரம், லலிதா சகஸ்ர நாமம், சௌந்தர்யலகரி போன்ற நூல்களை இயற்றியுள்ளார்.

Check Also

GCE AL Business Studies Model Paper 2021 Tamil Medium

GCE AL Business Studies Model Paper 2021 Tamil Medium

G.C.E A/L Business Studies Model Paper 2021 Tamil Medium Download G.C.E A/L Business Studies Model …

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks