இந்துநாகரிகத்தின் தொன்மை

இந்துநாகரிகத்தின் தொன்மை

உலகில் பல நாகரிகங்கள் தோன்றி வளர்ந்துள்ளன  ஆயினும் இந்தியாவில் சித்து நதிக்கரையில் ( சித்து நதி ) தோன்றி வளர்ந்த நகரீகம் சிந்துவெளி நாகரிகம் ஆகும். புராதன இத்தியாவில் வாழ்ந்த மக்களை வெளிநாட்டவர் இந்துகள் என அழைத்தனர். இதற்கு காரணம் இவர்கள் இந்து நதியின் அருகில் வாழ்ந்தனர். இம் மக்களின் வாழ்க்கை முறை, சமய நம்பிக்கைகள் கலை கலாசாரம், நடை உடைபாவனை, கட்டடக்கலை பழக்கவழக்கங்கள், உளப்பாங்கு, பண்பாடு போன்றவற்றை கற்றுகொள்ளுதலே இந்து நாகரிக படமாகும்.

இந்து சமயமும் இந்து நாகரிகமும் மனிதகுலம் தோன்றிய காலம் தொடக்கமே தோற்றம் பெற்றது என்பது அறிஞர்கள் கருத்து ஆகும்.ஆயினும் இந்து நாகரிகத்தின் தொன்மையை விளக்கும் ஆதாங்களை சிந்துவெளியில் கண்டுஎடுக்கபட்ட தொல்பொருட்களே காலத்தால் மிக முந்தியவையாகும். இன் நாகரிகம் இற்றைக்கு 5000 ஆண்டுகள் முன் சிறப்புற்று இருந்த ஒன்றாகும்.

சிந்துவெளி நாகரீகம் பற்றி கற்பதால் இந்து நாகரிகத்தின் தொன்மையும் சிறப்பையும் அறிந்து கொள்ளலாம்.

சிந்துவெளி நாகரீகமும் சமயமும் ( கிமு 3250- கிமு 2750 )

இந்தியாவில் வடமேற்கு எல்லையில் சிந்துநதி பாயும் பள்ளத்தாக்கு நதி சிறந்த நாகரிகம் ஒன்று வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலே விளங்கியது என்பது அகழ்வாராட்சி முலம் நிறுவப்பட்டது சிந்துவெளி நாகரீகம் எனப்படும்.இங்கு நாகரிகம் நிலவிய காலத்தில் கிமு 3250 – கிமு 2750 அதாவது இற்றைக்கு 5000 வருடத்திற்கு முன்பதாக ஆகும். சிந்துவெளி பிரதேசம் என்பது தற்போது பாகிஸ்தான் வசம்உள்ளது. பாகிஸ்தானில் சிந்து மாகாணம், பஞ்சாப் பாகிஸ்த்தான் போன்ற பிரதேசங்கள் ஆகும்.

1921,1922 ஆம் ஆண்டுகளில் சேர் ஜோன் மஸ்கல் தலைமையில் அலெக்ஸ்சாண்டர், கன்னிங்காம், சேர் வில்லியம் போன்ற சில இநதிய ஆராய்ச்சியாளர்கள் போன்றோர் இடையில் சிந்துவெளியில் அகழ்வாராய்ச்சிகளை மேற்கொண்டனர். இங்கு மொகஞ்சதாரோ, ஹரப்பா எனும் 2 நகரங்களை கண்டுபிடித்தனர். இரு நகரங்களுகும் இடையேயான இடைவெளி 1000 மைல்கள் ஆகும். ஆயினும் 2 உம் ஒரே வகையான

அமைப்பு உடையாதாக இருந்தன. அங்கு கண்டு எடுக்கபட்ட பொருட்கள், நகர அமைப்பு இங்கு ஒரு சிறந்த நாகரிகம் நிலவியதை காட்டியது. இது இருக்கு வேதம் காட்டும் ஆரியர் நாகரிகத்திலும் முற்றாக வேறுபட்டது. இது தென்னிந்தியாவில் இருந்த திரவிடர் உடைய நாகரிகத்தை பெரிதும் ஒத்து  இருந்தது. சிந்துவெளி நாகரிகம் திரவிடர் நாகரிகம் என்பதாகும். மத்திய ஆசியாவில் இருந்து வந்த இருப்பின் உபயோகத்தை குறித்து வெள்ளை நிற மக்களால் அரியர்கள் வருகையால் சிந்துவெளி நாகரிகம் சிதைவுற்றது. திராவிடர்கள் இநதியவில் தென்புரம் நோக்கி இடம் பெயர்ந்து பிற்காலத்தில் வடஇந்தியவிற்கு உரிய ஆரியரும் தென்னிந்தியவில் திரவிடர்ரும் இணைந்து இந்து சமயத்தையும் இந்து நாகரிகத்தையும் கட்டி எழுப்பினர்.

ஹரப்பா, மொகஞ்சதாரோ ஆகிய இடங்களில் கீழ் புதையுண்டு கிடந்த இலட்ச்சணைகளும் (முத்திரைகள்) உருவசிலைகளும் மக்களின் பாவனை பொருட்களும் கட்டடங்களின் அடி பாகங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு கண்டுஎடுக்கபட்ட பொருட்களின் இருந்து இங்கு வாழ்ந்த மக்கள் சிவவழிபாடு உடைவர்கள் என்பது சேர் ஜோன் மஸ்கல் என்பவரது கருத்தாகும். ஜோதி வடிவத்தில் உள்ள கொம்பையும் கடவுள்களின் இலச்சணையில் கொம்புகளுக்கு இடையில் செடி வளர்ந்தது போன்று காணப்படும் தலையில் வலது புறத்திலும் இடது புறத்திலும் முகங்கள் போன்ற 2 புடைப்புகள் காணப்படுகின்றன. இது திரிமுக (3 சிவன்) முத்திரையை குறிப்பதாக ஜோன் மார்க்கள் கூறி உள்ளார். கண்கள் பாதிமூடிய நிலையில் மூக்கு நுனியை பார்த்தவாறு கால் குதிகள் இரண்டும் ஒன்றை ஒன்று தொடுமாறு பத்மாசன முறையில் காணப்படும்.

மேலும் இக்கடவுள் உருவத்தை சூழ யானை ஒன்றும், புலி ஒன்றும் காண்டாமிருகம் ஒன்றும், எருமை ஒன்றுமாக விலங்குகள் காணப்பட்டுகின்றன.கடவுள் அமர்ந்து இருக்கும் பீடத்திற்கு கீழ் இரண்டு மான்கள் காணப்பட்டுகின்றன. இது உயிர்களுக்கு தலைவனாக விளங்கும் பசுபதி நிலையை காட்டுகின்றது.

சிவன் எனும் ஆண் தெய்வத்தை போலவே சக்தியாகிய பெண் தெய்வத்தையும் வழிபட்டனர். இத் தெய்வம் தாய் தெய்வமாகவும் நிலத்தெய்வமாகவும் (பூமாதேவி) இயற்கை தெய்வமாகவும் சிந்துவெளி மக்களால் வழிபட்டு இருக்கலாம் என கருதப்பட்டுள்ளது.ஹரப்பாவின் கண்டுஎடுக்கபட்ட ஒரு இலச்சணையில் பெண் தெய்வத்தின் கருப்பையில் இருந்து ஒரு செடி ஒன்று வளர்வதாக பொறிக்கப்பட்டுள்ளது. இது மக்கள் பெருக்கத்திக்கும் உலக உற்பத்திக்கும் சக்தியே காரணம் ஆணவள் என்று விளக்குகின்றது. இதைவிட பெண் தெய்வ உருவங்கள் சிந்துவெளியில் கண்டுஎடுக்கபட்டுள்ளன.

பிற்கால சைவ வழிபாட்டில் காணப்படும் சிறப்பு அம்சங்களான தீர்த்தமாடல், மரங்களை வழிபடல், களை மாட்டை வழிபடல் (நந்திவழிபாடு) நாக வழிபாடு, லிங்க வழிபாடு, போன்றவற்றையும் சிந்துவெளி மக்கள் மேற்கொண்டு இருந்தனர். என்று அங்கு கண்டுஎடுக்கப்பட்ட பொருட்களில் இருந்து அறிய கூடியாதாக இருந்தது இதில் சிவலிங்க வழிபாடு பிரதானம் ஆகும்.

ஹரப்பா நகரில் சிவலிங்க வடிவில் அமைந்துள்ள கருநீல கல் காணப்படுகின்றது. அதை விட வேறு பல கூம்புருவன சிவலிங்கம் போன்ற கற்கள் காணப்படுகின்றன. சிவலிங்கம் என்பது சிவனை குறிக்கும் அடையாளம் லிங்கம் சிவனையும் அதனை சூழவுள்ள பீடம் சக்தியையும் குறிக்கின்றது சிவனும்  சக்தியும் இணைத்து உலகை ஆளும் தத்துவத்தை குறிப்பதே சிவலிங்கம் ஆகும். சிந்துவெளியில்  கண்டு எடுக்கபட்ட இலட்சனைகளில் ஒரு வகை சித்திர எழுத்துகள் பொறிக்கப்பட்டுள்ளன. இந்த மொழி தமிழின் தொண்மையான மொழி என்பர். இவ் எழுத்துகள் இன்னும் முழுமையாக வாசிக்கப்படவில்லை இவ்வாறு படிக்கபட்டின் சிந்துவெளி நாகரிகம் பற்றிய பல தகவல்களை பெற்று கொள்ளலாம்.

சிந்துவெளி காலமானது புராதன வடஇந்திய மக்களின் வரலாற்று பெருமையினையும், இந்து சமய வளர்ச்சியினையும் காட்டி நிற்கின்றது. இங்கு கண்டு எடுக்கபட்ட எறாளமான ஆண் குறிவடிவங்கள் சிவலிங்க வழிபாட்டையும் நடராஜர், மும்மூர்த்தி, பசுபதி, கொம்புடைய தெய்வம் போன்றவை ஆண் தெய்வ வணக்கத்தை காட்டுகின்றது.லிங்க வடிவங்களில் துளை இடப்பட்டு இருப்பது லிங்கங்களை ஆம் மக்கள் கழுத்தில் அணிந்து இருந்தனர் என ஊகிக்க கூடியாதாக உள்ளது. ஆண் தெய்வ வழிபாட்டை விட சக்தி வழிபாடு சிறப்புற்றிருந்தது. அங்கு கண்டு எடுக்கபட்ட பெண் தெய்வ வடிவங்கள் இதற்கு சான்றாகும்.

தற்கால இந்துகளின் வணகத்தில் உள்ள நாக வழிபாடு அக் காலத்திலும் இடம் பெற்றிருந்தது அங்கு கண்டு எடுக்கப்பட்ட இலட்சனைகளால் அறிய கூடியாதாக இருந்தது.

நாகத்தை மக்கள் கூட்டம் வணங்குவது போன்ற ஒரு இலட்சனையும், நாகம் ஒன்றிற்கு ஒரு பெண் பால் வைப்பது போன்ற காட்சியும் கண்டு எடுக்கப்பட்டுள்ளது. இதைவிட மரம்,மிருகங்கள் போன்றவையும் வழிபடப்பட்டுள்ளன. ஆறு, கடல், மலை,சூரியன், சந்திரன் போன்ற இயற்கைச் சக்திகளுக்கு மதிப்பளித்தனர்.

அக்கால மக்கள் தெய்வ படிமங்களுக்கு பூசை செய்தனர். என்பதற்கு புகை படிந்த பூசை தட்டுகளும் பூசை உபகரணங்களும் சான்றாக உள்ளன. தெய்வத்திற்கு நிவெதனங்கள் படைத்தனர் என்பதற்கு சான்றாக தெய்வபடிமம் ஒன்றின் முன் உணவு பொருட்கள் படைக்கப்பட்டு இருப்பதை கொண்டு அறியலாம்.

எனவே இந்துவெளி நாகரிகம் ஆனது உலகில் தோன்றிய நாகரிகங்களில் உன்னதமானது என்றும் பிரதானமான சிவ வழிபாட்டையும் கொண்ட சமுகம் அங்கு இருந்தது என்பதையும் மேல் கூறிப்பிட்ட தகவல்கள் விளங்கி நிற்கின்றது எனலாம்.

சிந்துவெளி நாகரிக மக்களின் சமுக நிலை

சிந்துவெளி மக்களின் நாகரிக முறையானது நகரங்களை அடிப்படையாக கொண்டு அமைந்து இருந்தது. என  அங்கு கண்டறியப்பட்ட புதையல் பொருட்களில் இருந்தும்., கட்டட இடிபாடுகளில் இருந்தும் அறிய கூடியதாக உள்ளது. மக்களின் வதிவிடங்கள், போக்குவரத்து பாதைகள், வடிகால் அமைப்பு முறைகள், குளியல் அறைகள், களஞ்சிய அறைகள் போன்றன இவற்றுள் சிலவாகும்.

சிறந்த வீதி அமைப்பு முறைகளும், மிக நுட்பமான வடிகால் அமைப்பு சுகாதார வசதியுடன் கூடிய மாடிவீடுகள் என்பன அக்கால மக்களின் கட்டடகலை, நகரநிர்மாணம் பற்றிய அறிவை விளக்குகின்றது. இவர்களது கட்டடங்கள் எகிப்தியரும், சுமேரியரும் இதே காலத்துடன் கட்டிய கட்டடங்களுடன் ஒத்துப் போகின்றன. அங்காடி மண்டபங்கள், களஞ்சிய அறைகள், சமய வழிபாட்டு மண்டபங்கள் போன்றவை இவர்கள் அமைத்து இருந்தனர்.

வீதிகளை பொருத்தமட்டில் ஒரே சீராக கிழக்கு மேற்காகவும், தெற்கு வடக்காவும் அமைக்கப்பட்டன. பெரிய தெருக்கள் பத்து (10‍‍‌‍M )‍‌‍‍‌‌‌ அகலத்திலும், சிறிய தெருக்கள், பெரிய தெருக்கள் இ‍‌‌டையிடையே நேராக வெட்டி செல்கின்றன‌‌. தெருக்கள் அனைத்தும் வளைவு இன்றி நேராக செல்வது பிரமிக்கத்தக்கதாகும். தெருக்களின் இரு மருகிலும் பாதசாரிகள் நடந்து செல்வதற்கு நடைபாதைகள் அமைக்கப்பட்டிருந்தன. வீதிகளின் ஒரங்களின் கடைகளும், வீடுகளும் இருந்ததற்கான அடையாளம் காணப்பட்டன.

ஹரப்பாவும், மொகஞ்சதாரோவும் நகர அமைப்பில் ஒத்த தன்மையுடையதாக அமைந்து இருந்ததுள்ளது. என்பதை “ எடித்ரோமோரி “ என்பவர் கூறியுள்ளார். சிந்துவெளி மக்களின் நகர அறிவு பற்றிய அறிஞர்கள் நிச்சயம் இருந்து இருக்க வேண்டும் என இவர் கூறுகிறார். சுட்டசெங்கற்களையும், வெயிலில் உலர்த்திய செங்கற்களையும் கட்டடபணிக்கு இவர்கள் பயன்படுத்தி உள்ளனர். வெயில், மழையில் இருந்து சுவரை பாதுகாக்க சுவரின் வெளிப்புரம் சுட்ட செங்கற்களாலும், உட்புறம் உலர்ந்த செங்கற்களாளும் அமைத்துள்ளனர். தளத்தை பொருத்தமட்டில் சுட்ட செங்கற்களை பாவித்தனர். சுவர்கள் களிமண் சாந்தினால் பூசி அழுத்தமாக்கப்பட்டிருந்தது. சில சுவர்கள் தவிடு கலர்ந்த சாந்தினால் பூசப்பட்டு இருந்ததாக கூறப்படுகின்றது. மரத்தினால் கூரைகளை அமைத்து நாணல் புட்களினால் மேய்ந்து இருந்தனர். இதன் மீது கனமான களிமண் சாந்து பூசி கூரைகள் அமைக்கப்பட்டன. ஜன்னல், நிலைகதவுகள் சீராக அமைக்கப்பட்டிருந்தன.

புராதன எளில் மிக்க நகரங்களில் இல்லாத வகையில் கால்வாய் அமைப்பு சிறப்பாக காணப்பட்டது. இது வீடுகளில் இருந்து கழிவு நீரை அகற்றவும் தேங்கும் மழை நீரை அகற்றவும் பயன்படுத்தபட்டுள்ளது. இக் கால்வாய்கள் சுட்ட செங்கற்களால் அமைக்கபட்டிருந்தன. (30-60 cm)  வரை ஆழமுடையதாக கால்வாய்கள் காணப்பட்டது. கால்வாய்யை திறந்து துப்பரவு செய்வதற்காக வாயில் தட்டுகள் காணப்பட்டது. பெரிய கால்வாய்கள் கற்களால் மூடபட்டிருந்தன. இவ் அமைப்பானது தற்கால பொறியியல் அமைப்பை காட்டுகின்றன. கழிவு நீர் கொண்ட கால்வாய்கள் இணையும் இடத்தில் தொட்டி புதைக்கபட்டிருத்தன. நீருடன் செல்லும் குப்பைகள் இதில் தங்க கூடியதாகவும் நகர சுத்திகரிப்பாளர்கள் இதனை எடுக்க கூடியதாகவும் இருந்தது.

சிந்து வெளியில் காணப்பட்ட தானிய அறைகள் தானியங்கள்  பழுதடைந்து போகாமல் அளவான வெப்பம் உள்ளவாறு அமைக்கபட்டிருந்தது. மொகஞ்சதாரோவில் கண்டுபிடிக்கப்பட்ட தானிய களஞ்சியம் ஒன்று 168 அடி நீளமும் 135 அடி அகலமும் உடையது. சுவர்கள் 52m உயரம் 9 அடி கணமும் உடையன. இது ஆறு மண்டபங்களை உள்ளடக்கியது. அடியில் பலகைகள் பரப்பப்பட்டு அதன் மீது தானியங்கள் குவிக்கப்பட்டன என்பர். சுட்ட செங்கற்களால் ஆன இவ் அறைகள் ஹரப்பாவிலும் கண்டுபிடிக்கப்பட்டது. தானியங்கள் பழுதடையாமல் இருக்க வெளிச்சம், கற்று உட்புற வசதிகள் அமைக்கப்பட்டன.

மொகஞ்சதாரோவில் கிடைத்த தாடிக்கார மனிதவடிவம் ஒரு யோகியின் வடிவமாக அல்லது ஒரு சமயதலைவனின் வடிவமாக இருக்கலாம் என்று என்னப்படுகின்றது. இவ் அமைப்பு கவர்ச்சிகரமாகவும் மூவிலை சித்திர வேலைப்பாடுகள் கொண்ட போர்வையாள் போர்த்தப்பட்டவையாகவும் காணப்படுகின்றது.

சிந்துவெளியில் புரோகிதனே அரசனாக இருந்து இருத்தல் வேண்டும் “குரோபர்’’ எனும் அறிஞர் “ தாடிக்காரர் மனிதவடிவம் புரோகித அரசனாக இருத்தல் வேண்டும்’’ என்கிறார். சிந்து வெளியில் இருந்த புரோகிதருக்கு வடகிழக்கில் கண்டுபிடிக்கப்பட்ட வடிவம் புரோகிதருக்கு உரிய கல்லூரியாக இருக்கலாம் என கூறப்படுகின்றது. இவற்றை வைத்து நோக்கும்போது சிந்துவெளியில் சிறப்பான ஆட்சியை அறிய முடிகின்றது.

இங்கு கண்டுஎடுக்கபட்ட சிற்பகலைப் பொருட்கள் சிந்துவெளி மக்கள் ஓவியம், நடனம், சிற்பம் போன்ற கலைகளில் தேற்சியுடையவர்களாக இருந்தனர் என்பதை காட்டுகின்றது. மணற்கல், பளுப்புநிறக்கல் வேறு இடங்களில் இருந்து பெறப்பட்டு சிற்பங்கள் செதுக்கப்பட்டமையை ஹரப்பாவில் கண்டு எடுக்கபட்ட சிற்பகற்சிலைகள் கட்டுகின்றன.மொகஞ்சதாரோவில் கிடைத்த வெண்கலத்தால். செய்யப்பட்ட இள நடனமாதின் உருவம்சிந்துவெளி மக்களின் சிற்ப அறிவினை காட்டுவது போன்று நடன கலையும் சிறப்புற்றிருந்ததை அறியலாம். நிர்வாணமாக நிற்கும் இச் சிலை வழுவழுப்பாக நேர்த்தியாக அமைந்திருத்தல் கைநிறைய வளையல்கள் அணிந்த கூந்தல் மிக நுற்பமாக செய்யப்பட்ட ஒரு கையை இடுப்பில் வைத்தவாறு உள்ளது. இதிலிருந்து சிந்து வெளி மக்கள் சிற்பகலையோடு நடனகலையிலும் சிறப்புற்றிருந்தனர் என்பர்.

இங்கே கண்டு எடுக்கபட்ட மட்பாண்டங்கள் திண்னிய சிவப்பு களியினால் ஆனவை இம் மட்பாண்டங்களின் மீது சிறப்பாக ஓவியங்கள் தீட்டபட்டிருந்தன. வெள்ளாடு தனது குட்டியினை நக்கும் காட்சி, கோழி, மீனவர் இடது தோலில் வலைகாவி செல்லும் காட்சி, ஒரு பறவை மீன் வைத்து இருக்கும் காட்சியும் கீழே இருந்தது நரி பார்க்கும் காட்சியும் வர்ணங்களில் தீட்டபட்டுள்ளது. இதிலிருந்து இவர்கள் ஓவியகலை சிறப்புற்றிருந்தனர் என தெரிய வருகின்றது.

சிந்து வெளியில் கண்டுஎடுக்கபட்ட சிறுவர்களுக்கான விளையாட்டு பொருட்களில் சிறுவர்களுக்கான வண்டி ஒன்று சிறப்பானதாகும். இது பெரிய மாட்டு வண்டியை ஒத்தது. இதிலிருந்து சிந்துவெளி மக்கள் சில்லு பூட்டிய மிருகங்களால் இழுக்கப்பட்டது என அறிந்து கொள்ளலாம்.

சிந்துவெளியில் கண்டுஎடுக்கபட்ட ஆண் உருவம் ஒன்று கழுத்தில் உடுக்கு போன்ற இசை கருவி காணப்படுகின்றது. இதனால் இவர்கள் பல்வகை இசை கருவிகளை இசைத்தனர் என தெரியவருகிறது. இதைவிட இங்கு கண்டுஎடுக்கபட்ட ஆபரணங்கள், தாயத்துகள் போன்றவற்றில் இருந்து ஆபரணங்களை செய்யும் கலையிலும் பலவகை ஆபரணங்களை அணிவதிலும் சிறப்புற்று விளங்கினர் என தெரிய வருகிறது. ஆபரணங்கள் சுட்ட களிமண்களால், பலவகை நிறக்கற்களாலும், சிப்பி, வெள்ளி போன்றவற்றினால் ஆக்கப்பட்டது. மதகுரு சிற்பத்தின் ஆடையை பார்க்கும் இடத்து பூவேலைபாடுகளால் ஆன கரைகளை கொண்ட ஆடைகளை அணிந்து இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது. இவ் ஆடைகள் பருத்தி, கம்பளி போன்றவற்றல் ஆக்கப்பட்டது.

சிந்துவெளி மக்களின் உணவை பொருத்தமட்டில் கோதுமை, பார்லி, சிறுதானியங்கள், அரிசி, பழங்கள் என்பன உணவுப் பொருட்களாக இருந்துள்ளன. இவர்களுடைய உணவில் அப்பம் முக்கியம் பெற்றதை அங்கு காணப்படும் உருவம் காட்டுகின்றது. தானியங்களை அரைக்க திருகைகல், ஆட்டுகல் பயன்படுத்தப்பட்டுள்ளன. சிந்துவெளியில் பெரு வணிகர்கள் வாழ்ந்தனர் என்பதும் இவர்கள் பிறநாடுகளுடன் கடல்வியாபாரம் செய்துள்ளனர் எனத் தெரிய வருகிறது. விவசாயம், மரவேலை, உலோக வேலை, கட்டடநிர்மான வேலை, புரோகிதம், பனியாட்கள், சிற்பிகள் என பலதரப்பினர் இருந்துள்ளனர். ஆனால் சாதி அமைப்பு இருந்ததாக தெரியவில்லை மக்கள் எழுத்தறிவு உடையாவர்களாக இருந்துள்ளனர்.

எனவே இதுவரை கூறியவற்றல் சிந்துவெளி நாகரிக கால சமூகநிலையானது உயர்ந்த நேர்த்தியான சிறப்பான வாழ்க்கை முறையாக இருந்துள்ளமையை நாம் அறிய கூடியதாக உள்ளது.

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks