துவைதம் | மத்துவர் வேதாந்த கோட்பாடு

துவைதம் / மத்துவர் வேதாந்த கோட்பாடு

துவைதம் என்றால் இரண்டு என்பது பொருள் இங்கு இரண்டெனப் பேசப்படுபவை ஆன்மாவும், இறைவனும் ஆன்மா வேறு இறைவன் வேறு இவை இரண்டெனும் நிலை நீக்கி ஒரு போதும் ஒன்றெனும் நிலையை அடைவதில்லை இங்ஙனம் இரண்டும் ஒன்றல்ல இரண்டும் இரண்டேதான் என வற்புறுத்துவதனால் தான் இவ் வேதாந்தம் துவைதம் எனும் பெயர் பெறுவதாயிற்று. இக் கொள்கையை நிறுவியவர் மத்துவர் ஆவார்.

இவ்வாறு இறைவன் வேறு ஆன்மா வேறென அவை இரண்டிற்கும் இடையே உள்ள வேற்றுமையை (பேததத்தை) வற்புறுத்துவதோடு மத்துவர் நின்று விட வில்லை ஈஸ்வரன், சிவன், சடம் ஆகிய மூன்று பொருட்களும் என்றுமே உள்ளது என்பது மத்துவர் கொள்கை. இம் முப்பொருளை போலவே இவற்றிற்கும் இடையே உள்ள பேதங்களும் நித்தியமானது என்கிறார் மத்துவர். இம் மூன்று பொருட்களுக்கும் இடையில் மொத்தமாக 5 பேதங்களை இவர் எடுத்துக் காட்டுகிறார்.

  • சீவனுக்கும் ஈஸ்பரனுக்கும் மிடையிலான சீவேஸ்வரபேதம்
  • சடத்திற்கும் ஈஸ்பரனுக்கும் மிடையிலான சடஸ்வர பேதம்
  • சீவனுக்கும் சடத்திற்கும் மிடையிலான சீவசட பேதம்
  • ஒரு சீவனுக்கும் இன்னொரு சீவனுக்கும் மிடையிலான சீவபரஸ்பர பேதம்
  • ஒரு சடத்திற்கும் இன்னொரு சடத்திற்கும் மிடையிலான சடபரஸ்பர பேதம்

பலவாக காணப்படும் பொருட்களுக்கு இடையில் உள்ள வேற்றுமைகளை மறுத்து ஒற்றுமையை நிலை நாட்ட முயல்கிறார் சங்கரர் ஒற்றுமையை மறுத்து வேற்றுமையை வற்புறுத்துகிறார் மத்துவம் இதுதான் இவர்களுக்கிடைலான வேற்றுமையாகும். பொருட்கள் பல என்பதை நாம் உணர்வதற்கு அவற்றிக்கிடையிலான வேற்றுமைதான் காரணம் வேற்றுமை என ஒன்றில்லையானால் பொருட்கள் பல என்பது இல்லையாகும். மத்துவர் தனது கொள்கையை வேற்றுமை மூலம் காட்டுகிறார்.

இராமானுஜர் மத்துவர் ஒற்றுமை

இராமானுஜரைப் போலவே மத்துவரே இறைவன் மட்டும் இன்றி உலகமும் உயிர்களும் உண்டு என கருதுகிறார். விஷ்ணு தான் பரம்பொருள் என்பது இராமானுஜர் கொள்கை மத்துவர் கொள்கையும் அதுவே இவர்கள் இருவரும் தமது கொள்கைக்கு ஆதாரமாக வேத உபநிடதங்களை விட புராணங்களையும் ஆகமங்களையும் பெரிதும் தளுவுகின்றனர். சங்கரர் சைவசித்தாந்தங்கள் ஆயினும் சீவன் முத்தி என்ற நிலையை கூற இராமானுஜரும் மத்துவரும் இதனை ஆதரிக்கவில்லை.

இராமானுஜர் மத்துவர் வேற்றுமை

இராமானுஜர் இந்த உலகையும் அதில் உள்ள உயிர்கள் அனைத்தையும் உலகாகக் (உறுப்பு) கொள்ளுவார். ஆனால் மத்துவர் இதனை ஒப்புக்கொள்வதில்லை அத்தகைய மிக நெருங்கிய தொடர்பு எல்லாவற்றையும் கடந்த இறைவனுக்கு பொருந்தாது என்பது மத்துவர் கருத்து. இராமானுஜர் உலகை இறைவனது உலகாகக் கொள்வதால் இறைவன் தன்னையே உலகுக்கு உபாதானமாக்குகிறார். ஆனால் மத்துவர் உலகை இறைவனது உலகாகக் கொள்ளாமல் உலகைப் படைக்கும் நிமிர்த்த காரணமாக மட்டுமே இறைவனை காண்கிறார்.

மத்துவர் கூறும் வீடுபேறு

சில ஆன்மாக்கள் நரகத்தை அடைந்து என்றும் நரகவாசிகளாகவே இருக்கும் அவற்றிற்கு ஒருபோதும் விமோசனம் கிடையாது என்பது மத்துவர் கொள்கை இந்துக்களுள்ளே இக் கொள்கையை உடையோர் மத்துவரை தவிர வேறு எவரும் இருப்பதாக தெரியவில்லை ஆன்மாக்கள் இறைவனை நேரே அணுகமுடியாது இறைவனது புத்திரனாகிய வாயுவின் மூலமே அவை இறைவனை அடைய முடியும் என்பது மத்துவர் கொள்கை. பக்தி மூலம் சமய அனுஸ்டானங்கள் மூலம் ஆன்மாக்கள் நாராயணனது பாதாரவிந்தங்களை அடைதல் முத்தி எனக் கூறுகிறார்.

இவர் தென்னிந்தியாவிலே புகழ் பெற்ற உடுப்பி எனும் ஊரிலே 1199ம் ஆண்டு பிறந்தவர் துறவு பூண்டு பல அரிய சாதனைகளை கைவரப் பெற்றவர். இவர் 37 நுல்கள் இயற்றியுள்ளார். பிரம்மசூத்திரம், பகவத்கீதை,தசோபநிடதம் ஆகிய மூன்றிற்கும் எழுதிய பாசியங்கள் பிரதானமானவை.

×
Like us on Facebook
No Thanks
×
Did you like it?
Share it on Facebook
No Thanks